ஐபிஎல் ஏலம்.. சென்னைக்கு விளையாட விரும்பிய வீரர்.. மும்பைக்கு விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. ஆச்சரியம்!

0
2908
CSK

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஐபிஎல் ஏலம் ஒன்று வெளிநாட்டில் தற்பொழுது துபாயில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் பெரிய எதிர்பார்ப்பில் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்த ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5.80 கோடி ரூபாய்க்கு ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்துல் தாக்கூர் இருவரையும் சேர்த்து வாங்கி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் அதிக தொகையை வைத்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தின் ஆரம்பத்திலேயே தனக்கு எந்த வீரத் தேவையோ, அவர்களை வாங்கி அமைதியாக எல்லா தொகையையும் செலவழித்து விட்டு அமர்ந்து விட்டது.

மிகக் குறைந்த தொகையுடன் ஏலத்திற்கு வந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. அந்த அணிக்கு ஒரு நல்ல வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் தேவை என்கிற நிலை மட்டுமே இருந்தது.

மேலும் மும்பைக்கு தென் ஆப்பிரிக்காவின் கோட்ஸி இல்லையென்றால் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் இருவரில் ஒருவர் தேவை என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில் தென் ஆப்ரிக்காவின் கோட்ஸி ஏலத்திற்கு வந்தார். இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் ஏலத்தில் மோதின.

இந்த நிலையில் நடுவிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்பாராத விதமாக விலகிக் கொண்டது. இதற்கு அடுத்து உள்ளே வந்த லக்னோ அணியும் 5 கோடியில் விலகிக் கொண்டது.

20 கோடி ரூபாய்க்கு ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட கோட்ஸி வெறும் 5 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்துவிட்டார். இது தற்பொழுது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்திய வருகிறது.

தோனியின் தலைமையில் தான் விளையாடுவது பெரிய அனுபவமாக இருக்கும் என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னை வாங்கினால் மிகவும் மகிழ்வேன் என்றும் கோட்ஸி கூறியிருந்தார். அப்படியான வாய்ப்பு இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னோக்கி செல்லவில்லை என்பது ஆச்சரியம்தான்!