ஐபிஎல் ஏலம் 2023.. மும்பை இந்தியன்ஸ் குறிவைக்கும் 5 வீரர்கள்.. சிஎஸ்கேவுக்கு செக்!

0
1014
CSK

2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இந்த மாதம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. மினி ஏலத்தின் மூலமாக ஒவ்வொரு அணியும் தங்களது குறைகளை சரி செய்து பலமாக மாறும். எனவே மெகா ஏலம் முடிந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் போட்டித் தன்மை அதிகமாக இருக்கும்.

மேலும் சில வீரர்கள் மட்டுமே ஒவ்வொரு அணிக்கும் தேவை என்கின்ற காரணத்தினால், மினி ஏலத்தில் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் தேவையான வீரர்களை வாங்குவதில் மட்டுமே அணிகள் கவனம் செலுத்தும். இதனால் எதிர்பாராத பல வீரர்கள் பல கோடிகளை பெறுவார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தேவைக்கு, எந்த ஐந்து வெளிநாட்டு வீரர்களை குறி வைப்பதோடு சிஎஸ்கேவுக்கு செக் ஆகவும், எந்த வீரர்களை வாங்குவார்கள்? என்று என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

மிட்சல் ஸ்டார்க் :
வேகப்பந்து வீச்சுக்கு சிறப்பாக ஒத்துழைக்கும் மும்பை சிவப்பு மண் மைதானத்தில், 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் புதிய பந்தை ஸ்விங் செய்தும், பழைய பந்தில் யார்க்கர் வீசியும் அசத்தும் ஸ்டார்க் மும்பைக்கு தேவை. இடதுகை பந்துவீச்சாளர் என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறார்.

வனிந்து ஹசரங்கா :
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையாக இருக்கிறது. குறிப்பாக இவர் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் என்பதாலும், நல்ல கூக்ளி வைத்திருக்கிறார் என்பதாலும், இவரும் மும்பை ரேடாரில் இருப்பார்.

- Advertisement -

பேட் கம்மின்ஸ் :
தற்போது நல்ல மெதுவான பந்துகளை வீசக்கூடியவராக மாறி இருக்கும் ஆஸ்திரேலியா கேப்டன், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவார். மேலும் நல்ல அனுபவத்தோடு பேட்டிங் செய்பவராகவும் இருப்பதால், எதிர்பார்த்தவர்கள் கிடைக்கவில்லை என்றால் இவரிடம் மும்பை செல்லும்.

ஜெரால்ட் கோட்சி :
சராசரியாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் விட்டுக் கொடுக்காமல் வீசும் இந்த தென் ஆப்பிரிக்க இளைஞரை மும்பை மிக அதிகம் விரும்பும். ஏலத்தில் முதன்மையாக இவரை குறி வைத்து நகரவே வாய்ப்பு அதிகம். ரவிச்சந்திரன் அஸ்வினும் இதைக் கூறியிருக்கிறார்.

முஜீப் உர் ரஹ்மான் :
மும்பையின் சுழற்பந்து வீச்சு பற்றாக்குறை தெரிந்த விஷயமே. எனவே இந்த மிஸ்டரி ஸ்பின்னரை, ஏலத்தின் போக்கில் குறைந்த விலைக்கு வாங்க மும்பை திட்டம் வைத்திருக்கும். மேலும் இவர் பவர் பிளேவில் பந்து வீசுவார் என்பதால், அதிரடியாக சென்று மும்பை இவரை வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. தற்பொழுது இவர் பேட்டிங்கில் சிக்ஸர் அடிக்கும் கெப்பாசிட்டி கொண்ட வீரராகவும் மாறி இருக்கிறார்!