ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பே 2 அணிகள் பிளேயிங் லெவனை தேர்வு செய்துவிட்டது.. ஆதாரத்துடன் கூறிய இர்பான் பதான்

0
57

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்  அணி, IPL 2026 ஏலத்திற்கு முன்பே அனைத்து இடங்களையும் சரியாக நிரப்பிவிட்டதாக முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த சீசனில் புதிய திறமைகளை கண்டறிந்து ஆச்சரியப்படுத்தும் வகையில் மும்பை செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2025 சீசனில் இருந்து 9 ரிசர்வ் வீரர்களை மும்பை விடுவித்த நிலையில், வரும் ஏலத்திற்கு வெறும் ₹2.75 கோடி மட்டுமே அவர்களிடம் உள்ளது.  இது குறித்து பேசிய அவர், “இவர்கள் இப்போது ஆர்சிபியை போலவே இருக்கிறார்கள். டீம் செட்டில் ஆகிவிட்டது, எல்லா இடங்களும் கவர் ஆகிவிட்டன. இவ்வளவு சின்ன பர்ஸ் இருக்கே, இவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைப்பீர்கள்.”

- Advertisement -

மும்பை அணி:

“ஆனால் இவர்கள் எப்போதும் தொப்பியிலிருந்து முயலை எடுப்பார்கள். இது மேஜிக் தான். அதனால் ஒரு பிளேயரை கண்டுபிடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்துவார்கள்” என்று இர்பான் பதான் தனது யூடியூப் சேனலில் கூறினார்.

இர்பான் பதான் கணித்த மும்பை இந்தியன்ஸ் 2026 பிளேயிங் 11: ரோஹித் ஷர்மா, ரியான் ரிகல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் , நமன் தீர், ஷார்துல் தாக்கூர், மிட்செல் சான்ட்னர்/கார்பின் பாஸ்க், மயங்க் மார்கண்டே, ட்ரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா (இம்பாக்ட் சப்)   2020-க்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் ஒரு IPL கோப்பையை கூட வெல்லவில்லை. இந்த ஆண்டு குவாலிஃபையர் 2-ல் பஞ்சாப் கிங்ஸிடம் (PBKS) தோற்று வெளியேறினர்.

- Advertisement -

குஜராத் அணி:

இதே போன்று, குஜராத் டைட்டன்ஸ்  அணியும் அடுத்த மாத ஏலத்திற்கு முன்பே பெரும்பாலும் செட்டில் ஆகிவிட்டதாக இர்பான் பதான் நம்புகிறார். ஆனால், கீழ் மிடில் ஆர்டரில் ஒரு நல்ல ஃபினிஷரை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ஃபார்மில் இருக்கும் வாஷிங்டன் சுந்தரை அடுத்த சீசனில் மேல்வரிசை பேட்டிங்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“இவர்களுக்கு ஒரு நல்ல ஃபினிஷர் தேவை. ரூதர்ஃபோர்டை MI எடுத்துவிட்டதால், ஷாருக் கானும் தெவாட்டியாவும் சேர்ந்து ஆட ஒரு பேட்ஸ்மேனை வாங்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சனை வரலாம். அதைத் தவிர டீம் செட்டில் ஆகிவிட்டது. ஃபாஸ்ட் பவுலிங்கில் சிராஜ், பிரசித், இஷாந்த் ஷர்மா என நல்ல அனுபவம் இருக்கிறது.”

இதையும் படிங்க: சொல்லுங்க கம்பீர்.. உங்க வீரர்களுக்கு ஸ்பின் ஆட தெரியுமா? எதுக்கு ஸ்பின் பிட்ச் கேட்குறீங்க.. கையிப் தாக்கு

“இந்த வருடம் சுந்தரின் பேட்டிங்கை முடிந்த வரை பயன்படுத்துவார்கள். அவரை 4 அல்லது 5-ல் பேட் செய்ய வைக்கலாம்.” IPL 2025-ல் குஜராத் பிளே-ஆஃப்ஸ் வரை வந்தது, ஆனால் எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்று வெளியேறியது. இர்பான் பதான் கணித்த குஜராத் டைட்டன்ஸ் 2026 பிளேயிங் XI: ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாட்டியா, ஷாருக் கான், க்ளென் பிலிப்ஸ், ரஷீத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

- Advertisement -