சொல்லுங்க கம்பீர்.. உங்க வீரர்களுக்கு ஸ்பின் ஆட தெரியுமா? எதுக்கு ஸ்பின் பிட்ச் கேட்குறீங்க.. கையிப் தாக்கு

0
45

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன்களை துரத்த முடியாமல் தோல்வியடைந்தது, பல்வேறு விமர்சனத்தை எழுப்பியுள்ளது.  இந்திய அணியின் ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிரான பேட்டிங் திறனை முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் முகமது கைஃப்
கேள்வி எழுப்பியுள்ளார்.

பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தென்னாஃப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகள் வந்தால் ஸ்பின் சாதகமான பிட்ச்களில் ஆட விரும்புகிறார். ஆனால் நம்மிடம் ரேங்க் டர்னர்களில் ஆடக்கூடிய தரமான பேட்ஸ்மேன்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்திய வீரர்களுக்கு வராது:

தென்னாஃப்ரிக்காவின் ஆஃப்-ஸ்பின்னர் சைமன் ஹார்மர் இரு இன்னிங்ஸ்களிலும் இந்திய பேட்ஸ்மேன்களை வலைவீசி சிக்க வைத்து தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேசவ் மஹராஜ் மொத்தம் 3 விக்கெட்டுகளும், பார்ட்டைம் ஸ்பின்னர் ஏய்டன் மார்க்ரம் ஒரு ஓவர் மட்டுமே வீசி, வாஷிங்டன் சுந்தரை  ஆட்டமிழக்கச் செய்தார்.

இது குறித்து பேசிய கைஃப், “கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு, தென்னாஃப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகள் வந்தால் ஸ்பின் சாதகமான பிட்ச்களில் ஆட வேண்டும் என்று நினைக்கிறார். பிரச்சனை என்னவென்றால், ஸ்பின் பிட்ச் தயார் செய்ய முடியும்.ஆனால் நம் வீரர்களால் அதில் ஆட முடியுமா? இல்லை, அவர்கள் மறந்துவிட்டார்கள்.”

- Advertisement -

மற்ற பயிற்சியாளர் என்ன செய்தார்கள்:

“ராகுல் டிராவிட் பயிற்சியாளரான பிறகு, இங்கிலாந்துக்கு எதிராக 4-1 என்று வென்றோம். அப்போது ரோஹித் சர்மாவும் டிராவிடும் திட்டமிட்டது. நம்மிடம் அஸ்வின், குல்தீப், ஜடேஜா இருக்கிறார்கள், ஸ்பின் பிட்ச் வேண்டும், ஆனால் இரண்டாம் நாளிலிருந்து டர்ன் ஆரம்பிக்கக் கூடாது.”

“அந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள் அடித்தார். எல்லா போட்டிகளும் 4-வது நாள் கடைசி செஷனில் முடிந்தன. போட்டிகள் நீண்டு நின்றன. இந்தியா 500 அடிக்கும், எதிரணி 250, மறுபடியும் நாம் 300, எதிரணி 150-க்கு ஆல் அவுட்.அது தான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதற்கு சரியான வழி.”

இதையும் படிங்க: அன்றே எச்சரித்த புஜாரா.. இந்திய வீரர்களின் திறமையை வீணடிக்கும் கம்பீர்.. இத செஞ்சா சும்மா ஜெயிக்கலாம்

” ஏனென்றால் டிராவிடுக்கு தெரியும். நம்மிடம் குல்தீப், பும்ரா, ஜடேஜா, அஸ்வின் இருக்கிறார்கள், அவர்களுக்கு பிட்ச் உதவி தேவையில்லை. வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே பிட்ச் உதவி தேவைப்படும்” என்று கைஃப் மேலும் தெரிவித்தார். கவுதம் கம்பீர் இந்திய பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, இந்தியா சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதில் கடந்த ஆண்டு நியூஸிலாந்திடம் 0-3 தோல்வி அடைந்தது அடங்கும்.

- Advertisement -