ஐபிஎல் 2025.. தோனி எனக்கு தந்தை,  கடவுள் போன்றவர்.. முதல் சந்திப்பிலே நெகிழ்ச்சி வார்த்தை.. பதிரானா கருத்து

0
6

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 15 லீக் ஆட்டம் முடிவடைந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் 11 போட்டிகளில் ஏழு ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி பந்துவீச்சில் பலமாக இருந்தாலும் பேட்டிங்கில் மோசமாக இருக்கிறது. சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பதிரானா முதல் போட்டியில் விளையாடவில்லை. இந்த நிலையில் பதிரானா தற்போது சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகு பந்துவீச்சு மேலும் பலம் அடைந்திருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் முன்னாள் கேப்டனான தோனி உடன் நமக்கு இருக்கும் நட்பு குறித்து பதிரானா வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

என்னுடைய கிரிக்கெட் தந்தை :

அதில்,”தோனி எனக்கு தந்தை போன்றவர். ஏனென்றால் சிஎஸ்கே அணியில் அவர்தான் என்னை கண்டெடுத்து வழி நடத்துகிறார். என்னுடைய தந்தை என்னை வீட்டில் எப்படி பார்த்துக் கொண்டு வழிநடத்துவாரோ, அதேபோல் தான் தோனி என்னை பார்த்துக் கொள்கின்றார்.”

“இதனால்தான் தோனியை நான் என்னுடைய கிரிக்கெட்டின் தந்தை என்று அழைக்கின்றேன். என்னை தோனி முதல் முதலில் பார்த்தபோது மாலி என்று அழைத்தார். நான் மலிங்காவை போல் பந்து வீசுவதால் என்னை அனைவரும் லிட்டில் மலிங்கா, பேபி மலிங்கா என்று அழைப்பார்கள். ஆனால் மாலி என்பதற்கு சிங்களத்தில் தம்பி என்றும் பொருள்.”

- Advertisement -

தம்பி என்று அழைத்தார்

“முதல் சந்திப்பில் தோனி என்னை தம்பி என்று அழைத்ததால் எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் நெகிச்ச்சி அடைந்தேன். இது ஒரு நல்ல பயணமாக அமையப் போகிறது என்று அப்போது எனக்கு தெரிந்து விட்டது. தோனி போன்ற ஒரு ஜாம்பவான் என்னை தம்பி என்று அழைப்பது எனக்கு பெருமையாக இருந்தது என்று பதிரானா கூறினார்”

இதையும் படிங்க: கேகேஆர் பாணியில்.. சிஎஸ்கே பிளம்மிங் பேச்சுக்கு மரியாதை கிடைக்குமா.. சேப்பாக்கத்தில் டெல்லி அணி வீழுமா?

இது குறித்து பேசிய பதிரானாவின் தாய், “தோனியை பதிரானா தந்தை மற்றும் கடவுள் போல் பார்க்கின்றார். தந்தைக்கும் கடவுளுக்கும் எவ்வாறு மரியாதை கொடுப்பாரோ, அதேபோல் தோனிக்கும் பதிரானா மரியாதை தருவார் என்று  கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை சனிக்கிழமை டெல்லி கேப்பிட்டல் அணியுடன் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -