ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025.. லீக் சுற்று முடிவில் அதிக சிக்சர், அதிக பவுண்டரி அடித்த அணிகள் எது?

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. லீக் சுற்று முடிவில் அனைத்து அணிகளும் 14 லீக் ஆட்டங்களும் விளையாடிவிட்டார்கள். இதில் பஞ்சாப்,ஆர் சி பி, குஜராத் மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப்பில் தகுதி பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் லீக் சுற்றில் முடிவடைவில் எந்த அணிகள் அதிக சிக்ஸர்கள் அடித்து இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். இந்த சீசனில் அனைத்து அணிகளுமே 100 சிக்ஸர்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்திருக்கிறது. அதிக சிக்ஸர்கள் அடித்து இருக்கும் அணியில் லக்னோ முதலிடத்தில் கொடுத்திருக்கிறது. அந்த அணி 152 சித்தர்கள் அடித்து இருக்கிறது.

அதிக சிக்சர்கள் அடித்த அணி:

இரண்டாம் இடத்தில் 146 சிக்சர் உடன் ராஜஸ்தான் அணி இருக்கிறது. மூன்றாம் இடத்தில் 142 சிக்ஸர்களுடன் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் அணி நான்காவது இடத்தில் 120 சிக்சர் உடனும் உள்ளது. ஐந்தாம் இடத்தில் மும்பை அணி 118 சிக்சருடனும், ஆறாவது இடத்தில் குஜராத் அணி 116 சிக்சர்களுடன் உள்ளது.

ஆர் சி பி அணி 111 சிக்சர்ருடன் ஏழாம் இடத்தில் உள்ளது. டெல்லி அணி 109 சிக்ஸர் உடன் எட்டாம் இடத்திலும், சிஎஸ்கே அணி 102 சிக்சர் உடன் ஒன்பதாவது இடத்திலும், கே கே ஆர் அணி 101 சிக்சர் உடன் பத்தாவது இடத்தில் உள்ளது. 235 பவுண்டரிகளுடன் குஜராத் முதலிடத்திலும், 227 பவுண்டர்களுடன் மும்பை இரண்டாம் இடத்திலும், 223 பவுண்டரிகளுடன் பஞ்சாப் மூன்றாம் இடத்திலும்,219 பவுண்டரிகளுடன் டெல்லி நான்காம் இடத்தில் உள்ளது.

- Advertisement -

அதிக பவுண்டரிகள் அடித்த அணி:

219 பவுன்டரியுடன் சன்ரைசர்ஸ் ஐந்தாவது இடத்திலும், 218 பவுண்டரிகளுடன் லக்னோ ஆறாவது இடத்திலும், 216 பவுண்டர்களுடன் ஆர்சிபி ஏழாம் இடத்திலும், 209 பவுண்டரி உடன் ராஜஸ்தான் எட்டாவது இடத்திலும் 199 பவுண்டரி உடன் சிஎஸ்கே ஒன்பதாவது இடத்திலும், 173 பவுண்டரி உடன் கொல்கத்தா 10-வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: ரோகித் விராட் எதுக்கு ஓய்வு அறிவிச்சாங்க தெரியுமா?.. அதுக்கு பின்னாடி இந்த காரணம் இருக்கு – சர்துல் தாகூர் பேட்டி

பவர் பிளேவில் நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசஸ் பெற்றிருக்கிறது. சன்ரைசஸ் ராஜஸ்தானுக்கு எதிராக 94 ரன்கள் எடுத்திருக்கிறது. குறைந்தபட்ச பவர் பிளே ஸ்கோராக மும்பை பதிவு செய்திருக்கிறது. லக்னோ எதிராக மும்பை 66 பவுண்டரி எடுத்திருக்கிறது. இந்த சீசனில் மோசமாக விளையாடிய சிஎஸ்கே, புள்ளி பட்டியல் தவிர பாக்கி எதிலும் கடைசி இடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts