சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றது குறித்து இந்திய வீரர் சர்துல் தாக்கூர் பேசியிருக்கிறார்.
இந்த ஆண்டு அடுத்த மாதம் ஜூன் இருபதாம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சர்துல் தாக்கூர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
விராட் ரோஹித் ஓய்வு ஏன்?
இதுகுறித்து சர்துல் தாக்கூர் பேசும் பொழுது “இவர்கள் இருவருமே விளையாட்டில் மிகவும் மூத்த வீரர்கள். ஆனால் ஓய்வு போன்ற முடிவுகள் ஒருவரது தனிப்பட்ட முடிவுகள் ஆகும். முன்பு போல அணிக்காக பங்களிப்பு செய்யவும் அல்லது சிறந்த பார்மில் இருக்கவோ முடியாது என்று அவர்கள் உணர்ந்த காரணத்தினால்தான் ஓய்வு பெற்று இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்”
“இதேபோல சீனியர் வீரர்கள் அணியில் இருக்கும் போது நல்ல பாதுகாப்பு கிடைக்கும். ஒரு அணியில் சீனியர்கள் மற்றும் ஜூனியர்கள் கலந்த கலவையாக இருப்பது நல்ல முடிவுகளை கொடுக்கும். இப்போதைக்கு இந்திய டெஸ்ட் அணியை எடுத்துக் கொண்டால் மிகவும் மூத்த வீரராக ரவீந்திர ஜடேஜாதான் இருக்கிறார்”
இதை இவர்கள் பயன்படுத்தனும்
“நிச்சயமாக தற்போது இளம் வீரர்களை கொண்டு இந்திய டெஸ்ட் அணி உருவாக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் இது எங்களுக்கு உண்மையாகவே ஒரு சவாலாக தான் இருக்கப் போகிறது. தற்போது வாய்ப்பு பெற்று இருக்கும் இளம் வீரர்கள் தங்களது பாரம்பரியத்தை கட்டி எழுப்புவதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : வெளிப்படையா சொல்றேன்.. ஆர்சிபி பஞ்சாப்ல இந்த டீம்தான் பைனல் போகும் – அஸ்வின் கணிப்பு
“இங்கிலாந்தில் விளையாடும் பொழுது அங்கு இருக்கும் வானிலை தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அங்கு மூன்று விதமான வானிலை சூழல்களையும் நீங்கள் அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டியதாக இருக்கும். ஒரு நேரத்தில் குளிராகவும் உடனே வெயிலும் அதற்கு அடுத்து உடனே மழையும் பெய்யும். இதற்கு தகுந்தபடி மாறிக்கொண்டு விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






