நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடருக்கு முன்பாக, இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம் பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடருக்கான இந்திய ஸ்குவாடில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவர் ஒரு மேட்சிலும் விளையாட வாய்ப்பு பெறவில்லை. இதனால் அவர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட விடுவிக்கப்பட வேண்டும் அல்லது ரொட்டேஷன் முறையில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என சோப்ரா கருதுகிறார்.
அதேபோல், திலக் வர்மாவுக்கு பதிலாக சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு தரலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் திலக் வர்மா மிடில் ஆர்டர் மற்றும் பினிஷராக சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவரை நீக்குவது சரியான முடிவு அல்ல என்றும் ஆகாஷ் சோப்ரா மிக விரிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கான வாய்ப்பு குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஏனென்றால் அவருக்கான ஒரு பிளேஸ் உருவாகவில்லை. அவரை யாருடைய பிளேஸில் விளையாட வைப்பீர்கள்? நேர்மையாக சொல்லப்போனால், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா அல்லது இஷான் கிஷன் ஆகியோரின் பிளேஸில் மட்டுமே அவரால் விளையாட முடியும். இந்த மூன்று பேரும் நன்றாக செயல்படும் போது, திடீரென்று உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. இது இதயத்தை உடைப்பதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் வேறு வழி இல்லை. நான் பரிந்துரைக்கும் முறையை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் ரொட்டேஷன் முறையை பயன்படுத்தலாம். நான்கு பேருக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.
மேலும், திலக் வர்மாவின் ஃபார்ம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “உங்கள் உணர்வுகளை நான் புரிகிறேன், ஆனால் திலக் வர்மா எந்த செயல்பாட்டையும் காட்டவில்லை என்று சொன்னால், நீங்கள் சொல்வது கொஞ்சம் தவறானது. திலக் வர்மா நம்பர் 3 இடத்தில் விளையாடிய போது இரண்டு செஞ்சுரி அடித்தார். அதன்பிறகு அவருக்கு இன்ஜுரி ஏற்பட்டு வேர்ல்ட் கப் தொடருக்கு முன் சிறிய பிரச்சனை இருந்தது. வேர்ல்ட் கப் நன்றாக தொடங்கவில்லை, ஆனால் அதன்பிறகு அவர் பினிஷர் ஆனதில் இருந்து, ஆசியன் கேம்ஸ் ஆகட்டும் அல்லது இப்பொழுதாகட்டும் மிகவும் நல்ல வேலை செய்து வருகிறார். அவர் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படுகிறார் என்பதே உண்மை. அதனால் திலக் வர்மா மீது அம்பு எய்வது சரியல்ல” என்று கூறி இருக்கிறார்.