இந்திய கிரிக்கெட்

நமன் திர் சாதாரண ஹிட்டிங் பேட்ஸ்மேன் கிடையாது.. அவர் எனக்கு இன்னொருவரை ஞாபகப்படுத்துகிறார் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய இளம் வீரர் நமன் திர் ஆடிய அதிரடி பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அவரைப் பாராட்டிப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

​பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடந்த போட்டியில் மழை காரணமாக ஆட்டம் 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் இந்திய அணி 7.4 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

​இந்த போட்டியில் களமிறங்கிய நமன் திர் வெறும் 6 பால்களில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி உட்பட ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் விளாசி அசத்தினார். அவரது இந்த பவர் ஹிட்டிங் ஷாட்கள் அனைத்தும் ரசிகர்களையும் கிரிக்கெட் வல்லுநர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

​இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “முதல் பாலைப் பாருங்கள், பந்து லெக் திசையில் வீசப்பட்டாலும் அதை ஸ்டாண்ட்ஸுக்குள் அனுப்பியது அவரது கிளாஸைக் காட்டுகிறது. பின்னர் கிரிக்கெட் அறிவுத்திறனுடன் ஷார்ட் பந்தை எதிர்கொண்டு லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் அடித்தார். இந்த பையனுக்கு ஹிட்டிங் எபிலிட்டி இருக்கிறது, உயரமானவர், நீண்ட கைகளைக் கொண்டு பந்தை அற்புதமாக அடிக்கிறார். அவரிடம் ஹார்திக் பாண்டியாவின் சாயலை என்னால் பார்க்க முடிகிறது. பேட்டிங் செய்யும்போது நல்ல பேஸ் அமைத்து, கைகளை சிறப்பாகப் பயன்படுத்துகிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய ஆகாஷ் சோப்ரா “அவர் நம்பர் 6 அல்லது நம்பர் 7 பொசிஷனில் பேட்டிங் செய்யும் கடினமான வேலையைச் செய்கிறார். இந்த இடங்களில் வருபவர்களுக்கு சராசரியாக 7 அல்லது 8 பால்கள் மட்டுமே கிடைக்கும். ஷிவம் துபே மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோருக்கு போட்டியை பினிஷ் செய்யும் திறன் உள்ளது. அதுபோல 6 பால்களில் 24 ரன்கள் அடிக்கக்கூடிய மற்றொரு வீரரைத் தேடும் அந்த இடத்தை நிரப்பவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts