ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் போட்டியையும் சவால்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இம்பேக்ட் வீரர் விதிமூலம் அனைத்து அணிகளுமே பலமான அணிகளாக காட்சியளிக்கிறது.இதனால் எந்த அணி வெற்றி பெறும் எந்த அணி தோல்வி அடையும் என கணிக்கவே முடியாத அளவுக்கு ஐபிஎல் தொடர் அமைந்துள்ளது.
இந்த சூழலில் ஐந்து முறை சாம்பியன் பட்டங்களை வென்ற மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் பாதாளத்தில் இருக்கிறார்கள். மும்பை அணி ஒரு வெற்றி, மூன்று தோல்வியுடன் எட்டாவது இடத்திலும், சிஎஸ்கே ஒரு வெற்றி, மூன்று தோல்வியுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர்.
இன்னும் எத்தனை வெற்றி தேவை:
இந்த நிலையில் தற்போது நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 10 போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இந்த பத்து போட்டிகளில் இன்னும் எத்தனை வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதை தற்போது பார்க்கலாம்.
குறைந்தபட்சம் எட்டு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும். அப்படி இருக்கும் போது சிஎஸ்கே அணி ஒரு வெற்றியை ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் இன்னும் 7 ஆட்டங்களில் அந்த அணி வெற்றி பெற வேண்டும். சிஎஸ்கேவுக்கு இன்னும் பத்து ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. இந்த பத்துப் போட்டிகளில் குறைந்தபட்சம் அவர்கள் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
அடுத்த 3 போட்டி முக்கியம்:
இதனால் சிஎஸ்கே அணி இன்னும் மூன்று போட்டிகளில் மட்டும் தான் அவர்கள் தோற்க முடியும். இதற்கு மேல் அவர்கள் தோற்றால் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோய்விடும். ஏற்கனவே சிஎஸ்கே அணி கடந்த சீசனில் ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்து பிளே ஆப் வாய்ப்பை கடைசி கட்டத்தில் இருந்தது.
இதையும் படிங்க : நாங்க தோனிக்கு என்ன செய்யணும்னு நல்லா தெரியும்.. இந்த 2 விஷயம் தெரிஞ்சா போதும் – சாகல் பேட்டி
தற்போது மீண்டும் சிஎஸ்கேவுக்கு அதுபோல் ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணி என்ற சாதனையை சிஎஸ்கே படைத்திருந்த நிலையில், தற்போது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. சிஎஸ்கேவுக்கு அடுத்து நடைபெறும் மூன்று போட்டிகளும் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. இந்த மூன்று போட்டிகளுமே பலமான அணிகள் உடன் தான். பஞ்சாப், கொல்கத்தா மற்றும் லக்னோ என மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் மேலே செல்ல முடியும்.






