தோனி எப்பொழுது பேட்டிங் செய்ய வருவார் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனக்கு நன்றாக தெரியும் என பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் சாகல் கூறியிருக்கிறார்.
நாளை சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்திருக்கிறது. மேலும் தோனி குறித்து இந்த போட்டியில் எப்படி ஆன திட்டங்கள் அமைக்கப்படும் என சாரல் பேசியிருக்கிறார்.
தோனி இல்லாமல் சிதைந்த பந்துவீச்சு
இந்திய அணியில் தோனி விக்கெட் கீப்பராக இருந்த வரையில் சாகல் மிகவும் தாக்கம் கொடுக்கக்கூடிய பந்துவீச்சாளராக இருந்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு சரியான முறையில் ஆலோசனைகள் தருவதற்கு தனக்கு ஆள் இல்லை எனவும், எனவே தன்னுடைய பந்து வீச்சு சிரமங்களை சந்திப்பதாகவும் அவரே வெளிப்படையாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் அடுத்த போட்டியில் தோனி குறித்து பேசி உள்ள சாகல் கூறும் பொழுது “நான் பந்து வீசுவதை ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்து தோனி பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறார். எப்படி பந்து வீசுகிறேன் நான் எப்படி பந்து வீசினால் சரியாக இருக்கும் என்பது குறித்து அவருக்கு எல்லாம் தெரியும். ஆனால் அவர் என்ன நினைக்கிறார் என்பது குறித்து எனக்கு மூன்று அல்லது நான்கு சதவீதம்தான் தெரியும்”
தோனிக்கு இதை செய்வோம்
“தோனி முதல் 10 ஓவர்களுக்குள் பேட்டிங் செய்ய வருகிறார் என்றால் நாங்கள் பந்துவீச்சில் தாக்குதலைத் தொடுக்க வேண்டும். அதுவே அவர் கடைசியில் வருகிறார் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நீங்கள் அந்த நேரத்தில் அவருக்கு எளிதான பந்துகளை கொடுக்க முடியாது. அப்படி கொடுத்தால் அவர் வெளியே அடித்து விடுவார்”
இதையும் படிங்க :
“எனக்கு ஸ்ரேயாசை நன்றாக தெரியும். அவர் எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவர் நிறைய சுதந்திரம் தருகிறார். நீங்கள் அவரை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். அவரிடம் நீங்கள் எது வேண்டுமானாலும் பேசலாம். மேலும் எதிரணி ரன்கள் அடிக்கும் பொழுது அவர் எப்பொழுதும் பீதி அடைய மாட்டார். அவர் தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






