ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் யார்?

0
20

ஐபிஎல் வரலாற்றில் பல சாதனைகள் உடைக்கப்படுகிறது. 6 பந்துக்கு ஆறு சிக்ஸர்கள் அடித்தால் கூட அதிகபட்சமாக 36 ரன்கள் தான் அடிக்க முடியும். ஆனால் ஐபிஎல் தொடரில் தான் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் கூட சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதிய ஆட்டத்தில் ஒரே ஓவர் ஆட்டத்தின் தலை விதியை மாற்றியது.

இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகம் அடிக்கப்பட்ட ஸ்கோர்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் கிறிஸ் கெயில், பிரசாந்த் வீசிய ஒரு ஓவரில் கிறிஸ் கெயில் 37 ரன்கள் விளாசினார்.இதில் நான்கு, சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகள் ஒரு நோபால் அடங்கும். இதன் மூலம் கெயில் 37 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஒரே ஓவரில் அதிக ரன்கள்:

இந்த பட்டியலில் கெயிலுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருப்பவர் ஜடேஜா. ஹர்சல் பட்டியல் வீசிய ஒரு ஓவரில் ஜடேஜா 37 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்கள், ஒரு பவுண்டரி, ஒரு டபுள்ஸ், ஒரு நோபல் அடங்கும்.இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் கம்மின்ஸ். டேனியல் சம்ஸ் வீசிய ஓவரில் கம்மின்ஸ் 35 ரன்கள் விளாசினார்.

இதில் நான்கு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள், ஒரு டபுள்ஸ் மற்றும் நோபால் அடங்கும். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் சிஎஸ்கே வின் சின்ன தல சுரேஷ் ரெய்னா.பவிந்தர் அவனா வீசிய ஒரு ஓவரில் ரெய்னா 33 ரன்கள் விளாசினார். இதில் இரண்டு சிக்ஸர்கள், நான்கு பவுண்டரிகள் அடங்கும். இதில் ஒரு நோபால் வீசப்பட்டது.

- Advertisement -

ரெய்னா அடித்த 33 ரன்கள்

இதேபோன்று இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை ரெய்னா உடன் பகிர்ந்து இருப்பவர் ரோமேரியோ செபர்ட் ஆவார். சிஎஸ்கே வீரர் கலில் அகமது வீசிய ஓவரில் ரொமரியோ செபர்ட் 33 ரன்களை விளாசி இருக்கிறார். இதில் இரண்டு சிக்ஸர், நான்கு பவுண்டரி ஒரு நோபால் அடங்கும். கலீல் அஹ்மத் வீசிய இந்த ஒரு ஓவர் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க: நான் அந்த விஷயத்தை நினைச்சா என் திறமை போயிடும்.. கில் இப்படிப்பட்ட கேப்டன்தான் – சாய் சுதர்சன் பேச்சு

எனினும் இந்த தொடரில் அதிக டாட் பால்கள் வீசிய வீரரும் சிஎஸ்கே வின் கலீல் அகமது தான் என்பது குறிப்பிடத்தக்கது. கலீல் அஹ்மத் 11 போட்டிகளில் 111 டாட் பால்களை வீசி இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் 12 போட்டிகளில் ஜோப்ரா ஆர்ச்சர்ஜ விளையாடி 110 பால்களை வீசியுள்ளார். இந்த பட்டியலில் சிராஜ் 10 போட்டியில் விளையாடு 107 டாட் பால்கள் வீசியுள்ளார்.

- Advertisement -