ஐபிஎல் 2024.. சிஎஸ்கே பிளேயிங் XI-ல் எந்த 4 வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது

0
131
CSK

இந்த முறை 17வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்து முடிந்த மினி ஏலத்தில் ரச்சின் ரவீந்தரா, பேரில் மிட்சல் என இரண்டு வெளிநாட்டு வீரர்களை வாங்கியது. மேலும் அணியில் ஏற்கனவே டெவோன் கான்வே, மிட்சல் சான்ட்னர், மொயின் அலி, மதிச பதிரனா, மதிச தீக்ஷனா, முஸ்தஃபிசூர் ரஹ்மான் என ஆறு வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் மொத்தம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் எட்டு வெளிநாட்டு வீரர்களில், எத்தனை வெளிநாட்டு வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார்கள்? அவர்கள் யாராக இருப்பார்கள் என்பது குறித்து இந்த கட்டுரை தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் நான்கு வெளிநாட்டு வீரர்களை வைப்பது உறுதி. அவர்களுடைய டீம் செட் அப் அப்படித்தான் இருக்கிறது. அந்த நான்கு வீரர்கள் யார் என்று பார்க்கலாம்.

ரச்சின் ரவீந்தரா

- Advertisement -

டெவோன் கான்வே காயத்தால் எட்டு வாரங்கள் விளையாட முடியாத நிலையில் இருப்பதால், இந்திய மண்ணில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய, இடது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழல் பந்துவீச்சாளர் ரச்சின் ரவீந்தரா துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டேரில் மிட்சல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்து முடிந்த மினி ஏலத்தில் அம்பதி ராயுடு இடத்துக்கு சரியான வீரர் ஒருவரை வாங்குவதற்குதான் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து சென்று இருந்தது. அவர்களது டீம் டெம்ப்ளேட் படி அம்பதி ராயுடு இடத்துக்கு நியூசிலாந்தின் டேரில் மிட்சலை வாங்கி இருக்கிறார்கள். எனவே இவரை கட்டாயம் விளையாட வைப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

மதிச தீக்சனா

கடந்த முறை ஐபிஎல் தொடருக்கு கொஞ்சம் தாமதமாக இவர் வந்த பொழுதும், மகேந்திர சிங் தோனி உடனடியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுத்தார். மர்ம சுழல் பந்துவீச்சாளராக இருப்பதோடு, பவர் பிளேவில் பந்து வீசக்கூடிய திறமை இருப்பதால், கேப்டனுக்கு பவுலர்களை ரொட்டேட் செய்வதில் பெரிய வசதியை ஏற்படுத்தி தரக்கூடியவர். எனவே இவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது இயல்பான ஒன்றாக இருக்கலாம்.

இதையும் படிங்க : ஆஸிக்கு தண்ணி காட்டிய சிஎஸ்கே ஜோடி.. 2வது டெஸ்டில் நியூசிலாந்து பதிலடி.. வெல்ல போவது யார்

மதிச பதிரனா

தீக்சனா போலவே இவரும் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிளேயிங் லெவனில் இடம் பெறக்கூடியவர். இறுதிக்கட்டத்தில் பந்து வீசுவதற்கான இடத்தில் இவர் இருப்பதால், அந்த குறிப்பிட்ட விஷயத்திற்காகவே இவரும் பிளேயிங் லெவன்த் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இப்படி முதலில் கொடுக்கப்படும் வாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்தாத பொழுதுதான், இதில் ஏதாவது மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.