ஆஸிக்கு தண்ணி காட்டிய சிஎஸ்கே ஜோடி.. 2வது டெஸ்டில் நியூசிலாந்து பதிலடி.. வெல்ல போவது யார்

0
170
Rachin

நியூசிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து மண்ணில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 38 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 252 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு லபுசேன் 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி ஏழு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து 90 ரன்கள் பின்தங்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டாம் லாதம் 73, கேன் வில்லியம்சன் 51, ரச்சின் ரவீந்தரா 82, டேரில் மிச்சல் 58 என ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி 372 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணிக்கு 279 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நான்கு விக்கெட் இழந்து 77 ரன்கள் எடுத்திருக்கிறது. வெற்றிக்கு இன்னும் 202 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் 9, உஸ்மான் கவாஜா 11, லபுசேன் 6, கேமரூன் கிரீன் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். டிராவிஸ் ஹெட் 17, மிட்சல் மார்ஸ் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள். நியூசிலாந்து அணியின் தரப்பில் மேட் ஹென்றி மற்றும் பென் சீர்ஸ் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “டீம்க்கு வந்த சின்ன பசங்க சொன்னாங்க.. நான் சர்துல் தாக்கூருக்கு சப்போர்ட் பண்றேன்” – ராகுல் டிராவிட் பேட்டி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு நியூசிலாந்து கடும் போட்டி கொடுத்து வருகிறது. இந்த போட்டியை நியூசிலாந்து அணி வென்றால், புள்ளி பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கும். இந்திய அணி தற்பொழுது முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா அணி மூன்றாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.