மேட்ச்க்கு குடும்பம் முழுசா வந்தாங்க.. ஆனா சிஎஸ்கேவுக்கு சப்போர்ட் பண்ணாங்க – வருண் சக்கரவர்த்தி சுவாரசிய பேட்டி

0
960

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கொல்கத்தா அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி கேகேஆர் சில தவறுகளை சுட்டிக்காட்டினார்.

ஆடுகளம் டாஸ் போடப்படுவதற்கு முன்னரே இந்திய முன்னாள் தேர்வுக்குழு தலைவரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதை முன்னரே வெளிப்படுத்தினார். சென்னை அணி டாஸ் வென்றதுமே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கிட்டத்தட்ட சென்னை அணியின் திட்டத்தில் பாதி வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.

- Advertisement -

கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்தது.. பவர் பிளேவில் முதல் ஆறு ஓவர்கள் வரை நன்றாக சென்று கொண்டிருந்த கொல்கத்தா அணி 56 ரன்களுக்கு பிறகு விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. கொல்கத்தா அணியில் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ஒன்பது மற்றும் 11 ரன்களிலே வெளியேறினர். இதனால் கொல்கத்தா அணியால் சிறப்பாக ரன்களை குவிக்க முடியவில்லை.

அதன் பிறகு 138 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் விக்கெட்டை விரைவாக இழந்தாலும், அடுத்து வந்த டாரி மிச்சல் அணியின் கேப்டன் ருத்ராஜூடன் பாட்னர்ஷிப் அமைத்து ரன்களை உயர்த்தினர். இதில் மிச்சல் 25 ரன்களில் வெளியேறினாலும், அதற்கு பின்னர் களம் இறங்கிய ஆல் ரவுண்டர் சிவம் தூபே அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணி 17 ஓவர்களிலேயே 141 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

வருண் சக்கரவர்த்தி பேட்டி

கொல்கத்தா அணியின் தோல்விக்கு பின்னர் பேசிய சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆடுகளத்தை நாங்கள் சரியாக மதிப்பிடாதது போல் தோல்விக்கு காரணம் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“நாங்கள் ஆடுகளத்தை சிறப்பாக மதிப்பீடு செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஆடுகளம் மிகவும் மெதுவாகவே இருந்தது. குறிப்பாக ஆட்டத்தின் முதல் பாதியில் ஷாட்களை அடிப்பதில் மிகக் கடினமாக இருந்தது. 160 ரன்கள் சவாலாக ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன்.

- Advertisement -

நான் முதலில் ஆடுகளத்தை பார்க்கும் பொழுது பேட்டிங்கு சாதகமாக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர்தான் வித்தியாசம் தெரிந்தது. நான் முன்னரே கூறியது போல 160 ரன்கள் எடுத்திருந்தால் சவாலாக இருந்திருக்கும். குறிப்பாக ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் போது பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. நான் சிவம் துபேவுக்கு கடைசி ஓவர் வீசும் போது நிறைய வித்தியாசம் இருந்தது. பந்தை சரியாகப் பிடித்து என்னால் பேச முடியவில்லை.

இதையும் படிங்க:ஆட்டநாயகன் விருதுக்கு பின் பேசாமல் சென்ற சிஎஸ்கே முஸ்தபிசுர் ரஹ்மான் – வெளியான உண்மை காரணம்

சிவம் துபேவுக்கு ஏதேனும் திட்டங்கள் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். அசாதணரமான திட்டங்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு எதிராகவும் நாங்கள் திட்டங்கள் வைத்திருந்தோம். ஆனால் அந்தத் திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது. மேலும் எங்கள் குடும்பத்தில் இருந்து போட்டியை பார்க்க எல்லோரும் வந்து இருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் மஞ்சள் ஜெர்சியை அணிந்து சிஎஸ்கேக்கு சப்போர்ட் செய்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.