ஐபிஎல் 2024.. தொடங்கும் நாள்.. பாதியில் கிளம்பும் வெளிநாட்டு வீரர்கள் யார் யார்.?.. முழு ஐபிஎல் ஆடும் நாடுகள் எவை.. முழு விவரம்

0
18213

ஐபிஎல் 2024 தொடரானது அடுத்த வருடம் மார்ச் மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. மினி ஏலத்துக்கு முன்பாக ஐந்து நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்கள் முழு ஐபிஎல் சீசனிலும் கலந்து கொள்வார்கள் என்பதை உறுதிப்படுத்தி உள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் மாதம் தொடங்கி மே மாத இறுதிவரை நடைபெறும். இதில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய வீரர்களைப் பொறுத்தவரை முழு ஐபிஎல்லிலும் கலந்து கொள்வார்கள். ஆனால் வெளிநாட்டு வீரர்கள் அவர்கள் கலந்து கொள்ளும் சர்வதேசப் போட்டிகளுக்கு ஏற்றவாறு ஐபிஎல் சீசனில் கலந்து கொள்வார்கள்.

- Advertisement -

வெளிநாட்டு வீரர்களின் இருப்பு குறித்த தெளிவுக்கு பிறகு மினி ஏலத்தில் சில மாற்றங்கள் நிகழலாம். சில அணிகள் வீரர்களின் சர்வதேச போட்டியின் காரணமாக சீசனின் பாதியிலிருந்து வெளியேற்றலாம். எனவே இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான இறுதி அட்டவணையை இஎஸ்பிஎன் இறுதி அறிக்கையின் படி, இந்தியாவின் பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகளை தேர்தல் ஆணையம் இறுதி செய்யும்போது, போட்டிகளுக்கான இறுதி அட்டவணை வெளியிடப்படும்.

இந்நிலையில் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள், தனது அணி வீரர்கள் சீசன் முழுவதும் பங்கேற்பதற்கான உறுதி அளித்துள்ளன. அதன்படி ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை 2024 முழு சீசனிலும் தங்கள் வீரர்களைக் கிடைக்க செய்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஜோஸ் ஹாசில்வுட் தவிர அனைத்து வீரர்களையும் ஐபிஎல் முழுமையாக விளையாட அனுமதித்துள்ளது. முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இவர், ஒரு மாதம் ஐபிஎல் போட்டிகளை இழக்க நேரிடும். அதாவது மே முதல் வாரத்தில் இருந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் மார்ச் 21 முதல் 25 வரை ஷெஃபீல்ட் ஷீல்ட் இறுதிப் போட்டி நடைபெற உள்ளதால் குறுகிய காலத்திற்கு வீரர்கள் விளையாட மாட்டார்கள். முதல் தர போட்டியை விட ஐபிஎல்ஐ தேர்வு செய்யும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தயாராகும் விதமாக அதற்கு முன்னர் நடைபெறும் டி20 தொடர்களை இன்னும் முழுமையாக அறிவிக்கவில்லை.

இதனால் சில முக்கிய வீரர்கள் ஐபிஎல் விளையாடாமல் போகலாம். மேலும் வீரர்களின் உடற்தகுதியை கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதில் ரெகான் அகமது மட்டுமே ஐபில்லில் இருந்து விலகி உள்ளார். அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஜேசுவா லிட்டில் முழு சீசனிலும் விளையாடுவார். பங்களாதேஷ் அணியின் முஸ்தபிசுர் ரகுமான் மார்ச் 22 முதல் மே 11 வரை மட்டுமே விளையாடுவார்.

தஸ்கின் அகமது மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் ஏலத்தில் இருந்து தங்கள் பெயரை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த காலகட்டத்தில் அவர்கள் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உள்நாட்டு தொடரில் விளையாட உள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு தயாராகும் விதமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை பங்களாதேஷிற்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. எனினும் வனிந்து ஹசரங்கா, மத்திசா பத்திரனா, தீக்சானா, சமீரா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார்கள் என்பதால் அவர்கள் ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவார்கள்.