“ஐபிஎல் 2024.. ஆர்சிபி-ல இந்த வீரருக்கு தயவுசெய்து முதல் வாய்ப்பு கொடுங்க” – ஏபி டிவில்லியர்ஸ் கோரிக்கை

0
209
RCB

16 ஆண்டுகளாக நடைபெற்று முடிந்திருக்கும் ஐபிஎல் தொடரில் மிகவும் வித்தியாசமான ஒரு அணி பெங்களூரை தலைமையிடமாக கொண்டு விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

இந்த நீண்ட ஐபிஎல் பயணத்தில் அந்த அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. பெரிய அளவில் பிளே ஆப் சுற்றுக்களுக்கும் சென்றதில்லை. ஆனால் அந்த அணிக்கு இருக்கும் தீவிர ரசிகர் கூட்டம் சாம்பியன் அணிகளுக்கு மட்டுமே இருக்கிறது.

- Advertisement -

மேலும் அந்த அணியில் விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ், கெயில், வாட்சன் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் விளையாடி இருக்கிறார்கள், விளையாடிக் கொண்டும் இருக்கிறார்கள்.

மேலும் அந்த அணி வெளியே விட்ட பல வீரர்கள் வேறு அணிகளுக்கு சென்று மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். பெங்களூர் அணிக்கு அதே வீரர்கள் மீண்டும் தேவைப்பட்ட பொழுது வாங்க முடியாமல் போயிருக்கிறது. இப்படி பல ஆச்சரியங்களையும் முரண் களையும் கொண்டிருக்கும், அதே சமயத்தில் வணிக ரீதியாக மிகப்பெரிய இடத்தில் இருக்கும் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் நட்சத்திர வீரராக இருந்த தென் ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிசிசை வாங்கி கேப்டனாக மற்றும் துவக்க வீரராக விளையாட விட்டு இருக்கிறது. ஆனால் அவருக்கு வயதாகி இருக்கும் காரணத்தினால், எதிர்காலத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல துவக்க ஆட்டக்காரர் தேவைப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் வில் ஜேக்சை கடந்த ஆண்டில் வாங்கி இருந்தது. அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் விளையாட வைக்க முடியவில்லை. அவர் பிரான்சிஸ் டி20 லீக்குகளில் இதுவரை 139 இன்னிங்ஸ் விளையாடி, 159 ஸ்டிரைக் ரேட்டில், 3892 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 30 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடக்கம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக இருந்து ஓய்வு பெற்ற ஏபி டிவில்லியர்ஸ் கூறும் பொழுது ” வில் ஜேக்ஸ் பெற்று இருக்கும் திறமைக்கு, அவர் இதுவரையில் பெங்களூர் அணிக்கு விளையாடவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று. ஆர்சிபி அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அவர் தங்கள் அணிக்காக விளையாட வேண்டும் என விரும்புகிறார்கள்.

அவரைப் பிளேயிங் லெவனின் விளையாட வைக்க முடியுமா என்பது பெரிய கேள்வி. ஆனால் தேர்வாளர்களுக்கு இது ஒரு கனவான விஷயம். அவருக்கு இந்த முறை ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும் அவர் டி20 கிரிக்கெட்டுக்கு ஒரு முழுமையான வீரர். சின்னசாமி மைதானம் என்று மட்டும் இல்லை அவரால் எங்கு வேண்டுமானாலும் ஆர்சிபி அணியை வெற்றி பெற வைக்க முடியும். எனவே அவரை விளையாட வைக்க ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.