15.3 ஓவர்.. இஷான் கிஷான் சூரியகுமார் காட்டடி.. மும்பை இந்தியன்ஸ் ஆர்சிபி-யை அசால்டாக வென்றது

0
271
IPL2024

இன்று நடப்பு ஐபிஎல் 17ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் ருத்ர தாண்டவம் ஆடி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கிறது.

இன்று டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் விராட் கோலி 3 (9), அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 (6) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து கேப்டன் பாப் டு பிளிசிஸ் மற்றும் ரஜத் பட்டிதார் ஜோடி சேர்ந்தது 47 பந்துகளில் 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

- Advertisement -

ரஜத் பட்டிதார் 26 பந்தில் 50 ரன்கள், கேப்டன் பாப் டு பிளிசிஸ் 40 பந்தில் 61 ரன்கள், கடைசிக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக 23 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்கள். ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா நான்கு ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க ஜோடி அதிரடியாக ஆரம்பத்தை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 53 பந்தில் 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. அபாரமாக விளையாடிய இஷான் கிஷான் 34 பந்தில் 7 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்தார். ரோகித் ஷர்மா 24 பந்தில் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : ஆர்சிபிக்கு எதிராக அம்பயரின் 4 தவறான முடிவு.. விராட் கோலியும் ரசிகர்களும் கோபம்.. களத்தில் என்ன நடந்தது?

- Advertisement -

இந்த முறை மூன்றாவது இடத்தில் வந்த சூரிய குமாரி யாதவ் அவர் பங்குக்கு ஒரு ருத்ர தாண்டவம் ஆடினார். 17 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்து மிரட்டினார். இறுதியாக அவர் 19 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா 21* (6) மற்றும் திலக் வர்மா 16* (10) ரன்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவரில் அதிரடியாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.