வார்னருக்கு காற்றில் பறந்து பதிரனா.. பிரமித்து போய் நின்ற தோனி.. சிஎஸ்கேவுக்கு முதல் திருப்புமுனை

0
521
Dhoni

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டாவது போட்டியில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆச்சரியப்படுத்தும் விதமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படாத இந்திய இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு இந்த முறை ரிக்கி பாண்டிங் வாய்ப்பு கொடுத்திருந்தார். சிஎஸ்கே அணியில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.

- Advertisement -

இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி தேவை என்கின்ற நிலையில், துவக்க ஜோடியாக வந்த டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இருவரும் மிகச் சிறப்பான முறையில் பேட்டிங் செய்தார்கள். முதல் மூன்று ஓவர்கள் பொறுப்பாக விளையாடிய இவர்கள், பவர் பிளேவின் கடைசி மூன்று ஓவரில் அதிரடியில் மிரட்டி விட்டார்கள்.

இந்த ஜோடி பவர் பிளேவில் அதிரடியாக 62 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடியில் டேவிட் வார்னர் அரை சதம் அடித்தார். மேலும் பவர் பிளே முடிந்த ரவீந்திர ஜடேஜா வர அவரை இரண்டு பேரும் சிக்ஸர்களுக்கு அடித்து கேப்டன் ருதுராஜுக்கு பெரிய நெருக்கடியை உண்டாக்கினார்கள். இதன் காரணமாக அவர் பத்து ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே பதிரனாவையும் கொண்டு வந்தார். இந்த ஜோடி 58 பந்தில் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து முஸ்தஃபிசூர் பந்துவீச்சில் பின்பக்கமாக திரும்பி பவுண்டரி அடிக்க டேவிட் வார்னர் விளையாட, பந்து காற்றில் பறந்தது. இந்த நேரத்தில் உள் வட்டத்தில் நின்று இருந்த மதிஷா பதிரனா மைதானத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவரும் காற்றில் பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார். டேவிட் வார்னர் 35 பந்தில் ஐந்து பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர் உடன் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : எல்லோரும் ரன் அடிக்க நினைக்கிறாங்க.. ஆனா நான் மில்லர் கூட பண்ண பிளான் இதுதான் – சாய் சுதர்ஷன் பேட்டி

விக்கெட் கீப்பராக நின்ற தோனி அவருக்கு பக்கத்தில் இருந்து பதிரனா பிடித்த இந்த கேட்ச்சை பார்த்து ஆச்சரியத்தில் கைத்தட்டி பாராட்டினார். மேலும் சிஎஸ்கே வீரர்கள் மற்றும் மைதானத்தில் இருந்த எல்லோரும் இந்த சிறந்த கேட்சுக்கு நீண்ட நேரம் கைதட்டி தங்கள் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.