எல்லோரும் ரன் அடிக்க நினைக்கிறாங்க.. ஆனா நான் மில்லர் கூட பண்ண பிளான் இதுதான் – சாய் சுதர்ஷன் பேட்டி

0
267
Sai

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மேலும் அந்த அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நல்ல முறையில் தொடங்கியது, ஆனால் பவர் பிளே முடிந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அபிஷேக் ஷர்மா மற்றும் அப்துல் ஜமாத் இருவரும் தலா 29 ரன்கள் எடுத்தார்கள். மோகித் சர்மா சிறப்பாக பந்துவீசி 25 ரன்களுக்கு மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சகா 25, கேப்டன் கில் 36, சாய் சுதர்சன் 45, டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 44 ரன்கள் எடுக்க, குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவரில் டார்கெட்டை எட்டி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குஜராத் அகமதாபாத் மைதானத்தின் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. மேலும் மைதானமும் பெரிதாக இருப்பதால் பவர் பிளே முடிந்து அடித்து விளையாடுவது கடினமாக இருக்கிறது. இன்றைய போட்டியில் டேவிட் மில்லர் உடன் சாய் சுதர்சன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் கொண்டு வந்து அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய சாய் சுதர்ஷன் “எனது பங்களிப்பு அணி வெற்றி பெற உதவியதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் மெதுவாக பந்து வீசும் பொழுது அடித்து விளையாட மிகவும் கடினமாக இருந்தது. இதன் காரணமாக சுழற் பந்துவீச்சாளர்களை தாக்கி விளையாட நானும் டேவிட் மில்லரும் முடிவு செய்தோம். மோகித் பாய் மற்றும் ரஷீத் பாய் இருபது பந்துவீச்சு பங்களிப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக அவர்களை 10 முதல் 15 ரன்கள் குறைவாக வைத்தோம்.

இதையும் படிங்க : 19.1 ஓவர்.. மில்லர் தோனி சாதனைக்கு செக்.. கம்மின்ஸ்க்கு கில் பதிலடி.. குஜராத் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி

சொந்த மைதானத்தில் சொந்த ரசிகர்களின் முன்னால் விளையாடுவது பெரிய பலம். நான் தொடர்ச்சியாக 40 ரன்கள் ஆட்டம் இழப்பதை பற்றி கவலைப்படவில்லை. எல்லோரும் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதைச் செய்தாலே தானாக எல்லா சாதனைகளும் வரும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -