ஐபிஎல் 2024

ஐபிஎல்-ல் 2வது அணியாக ராஜஸ்தான் சாதனை.. பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமானது.. லக்னோ அணி தோல்வி

நடப்பு ஐபிஎல் தொடரின் 44 வது போட்டியில் லக்னோ மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றது. லக்னோ அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2024 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்குள்ஏறக்குறைய நுழைந்திருக்கிறது என்று கூறலாம்.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் 8(3), மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 0(4) என சொற்ப ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதனால் லக்னோ அணிக்கு நெருக்கடி உண்டானது.

இந்த நிலையில் கேப்டன் கேஎல்.ராகுல் மற்றும் தீபக் ஹூடா இருவரும் சேர்ந்து பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி ரன்களை திரட்டினார்கள். இந்த ஜோடி 62 பந்துகளில் 115 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. தீபக் ஹூடா 31 பந்துகளில் 7 பவுண்டர்கள் உடன் 50 ரன்கள் எடுத்தார்.

சிறப்பாக விளையாடிய கேப்டன் கேஎல்.ராகுல் அரைசதம் அடித்து 48 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்தார். இவர்களுக்கு அடுத்து ஆயுஷ் பதோனி 13 பந்தில் 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. சந்தீப் சர்மா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர் 18 பந்தில் 34 ரன்கள், ஜெய்ஸ்வால் 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த ரியான் பராக் 11 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : பிசிசிஐ ஹர்திக்கை சூப்பர் ஸ்டார் மாதிரி நடத்துறத நிறுத்துங்க.. ஆஸியை பார்த்து திருந்துங்க – இர்பான் பதான் விமர்சனம்

இதைத்தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜுரல் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய இந்த ஜோடி 62 பந்துகளில் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. துருவ் ஜுரல் 34 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 71 ஆட்டம் இழக்காமல் எடுத்தார். 2022 ஆம் ஆண்டு முதல் 9 போட்டிகளில் 8 போட்டிகளை குஜராத் வென்று இருந்தது. தற்பொழுது அந்த சாதனையை ராஜஸ்தான் சமன் செய்து சாதனை படைத்திருக்கிறது.

Published by