ஐபிஎல் 2024

சுயமரியாதைக்காக விளையாடுறோம்.. ரசிகர்களை ஏமாற்ற விரும்பல.. அதுக்காக இந்த ஷாட் ஆடறேன் – விராட் கோலி பேச்சு

இன்று ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி பெங்களூர் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் அவர் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. பாப் டு பிளிசிஸ் மற்றும் வில் ஜேக்ஸ் இருவரும் விரைவாக வெளியேறினார்கள். இந்த நிலையில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 47 பந்தில் 92 ரன்கள் குவித்தார். இவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய ரஜத் பட்டிதார் 23 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து 241 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி பெரிய இலக்கை நோக்கி விளையாடி 17 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு ரூசோவ் மட்டுமே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இந்த தோல்வியின் காரணமாக பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது. மேலும் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் தொடர்கிறது.

இந்த போட்டியின் வெற்றிக்குப் பிறகு ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி போட்டி குறித்து பேசும்பொழுது “என்னை பொறுத்தவரையில் அளவை விட தரம் முக்கியமானது. இது எனக்கு நன்றாக வேலை செய்து இருக்கிறது. விளையாட்டின் புரிதல்கள் உங்களை குறைவாக பயிற்சி செய்ய அனுமதிக்கும். கடந்த காலத்தில் நான் செய்ததை மீண்டும் செய்யவும், ஒரு பேட்டராக தற்போது விளையாட்டிற்கு எந்த விஷயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறேன்.

- Advertisement -

நான் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப் விளையாடினேன். நான் இதை பிராக்டிஸ் செய்யவில்லை. ஆனால் நான் இதை கடந்த காலங்களில் செய்திருப்பது எனக்குத் தெரியும். ஸ்பின்னர்களுக்கு எதிராக குறிப்பிட்ட அந்தப் பகுதியில் விளையாடுவதற்கு இந்த ஷாட் தேவை. நான் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். இதுகுறித்து நாங்கள் பேசியிருக்கிறோம். எங்கள் அணிக்கும் எனக்கும் ஸ்ட்ரைக் ரேட் தேவை. நமக்கு நாமே நேர்மையாக இருப்பது தான் போட்டிக்கு செல்ல சிறந்த வழி.

இதையும் படிங்க : இன்னைக்கு நடந்த இது ஒரு பெரிய விஷயம்.. நாங்க நல்ல டீம்ல நிரூபிக்காம மட்டும் விட மாட்டோம் – பாப் டு பிளேசிஸ் பேட்டி

நாங்கள் பிரச்சனைகளை குறித்து நேர்மையாக பேசினோம். முன்னேறி செல்ல முடிவெடுத்தோம். நாங்கள் எங்கள் சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம். நாங்கள் அங்கு சென்று மோசமாக விளையாடி எங்கள் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. தற்பொழுதுநம்பிக்கை திரும்பி இருக்கிறது. நாங்கள் நல்ல ரோல்களில் இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

Published by