ஐபிஎல் 2024

இன்னைக்கு நடந்த இது ஒரு பெரிய விஷயம்.. நாங்க நல்ல டீம்ல நிரூபிக்காம மட்டும் விட மாட்டோம் – பாப் டு பிளேசிஸ் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட போட்டி ஹிமாச்சல் பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கான காரணங்கள் குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் பேட்டி அளித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் தோற்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் இளம் வீரர் ரஜத் பட்டிதார் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுக்க, அதிரடியாக விளையாடிய விராட் கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து அசத்தியது.

இதைத்தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு ரைலி ரூசோவ் மட்டும் தனியாக அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். மற்றபடி வேறு யாரும் அரைசதங்களுக்கு செல்லவில்லை. அந்த மணி 17 ஓவர்களில் 181 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆகி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியின் காரணமாக பஞ்சாபின் சனி தற்போது ஐபிஎல் தொடர் பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியிருக்கிறது. அதே சமயத்தில் ஆர்சிபி அணி இன்னுமொரு பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பெற்று தொடரில் நீடிக்கிறது. மேலும் தற்பொழுது இந்த அணி நல்ல ரன் ரேட் பெற்றிருக்கிறது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் “இது நிஜமாகவே நல்ல ஆட்டம். ஏனென்றால் நாங்கள் டாஸ் தோற்று 240 ரன்களுக்கு மேல் எடுத்து போட்டியை வென்று இருக்கிறோம். நாங்கள் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வது குறித்து அணியில் உரையாடினோம். நாங்கள் பவர் பிளேவில் விக்கெட் எடுக்காதது போதுமான ரன்கள் அடிக்காதது குறித்து எங்கள் அணுகுமுறையை மாற்றி இருக்கிறோம்.

இதையும் படிங்க : 17 ஓவர்.. ஆர்சிபி அசத்தல் வெற்றி.. பஞ்சாப் வெளியேறியது.. சிஎஸ்கேவுக்கு வந்த புது தலைவலி

தற்போது எங்களுக்கு பந்துவீச்சில் ஆறு ஏழு விருப்பங்கள் இருக்கின்றன. உங்கள் பக்கத்தில் ஃபார்ம் இருக்க வேண்டும் அதே சமயத்தில் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். எங்களிடம் எடுத்ததும் ரன் மற்றும் விக்கெட்டை தேடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். எதையும் மாற்றும் குணத்தை எங்கள் வீரர்கள் காட்டி இருக்கிறார்கள். நாங்கள் சிறந்த அணி என நிரூபிக்காமல் விடமாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

Published by