டி20 உலகக் கோப்பை 2024

பாபர் அசாம் அவங்க கூட 3 சிக்ஸ் அடிச்சா.. என் யூடியூப் சேனலை மூடுறேன் – முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சவால்

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அனைத்து அணிகளும் தங்களை முழு வீச்சில் தயார்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஏற்கனவே அறிவித்து விட்டது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் சாம்பியன் அணியை நிர்ணயிக்கப் போகும் தொடரான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏற்கனவே தங்களது வீரர்களை அறிவித்து விட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாஸித் அலி சவால் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த சவாலை அவர் முறியடிக்கும் பட்சத்தில் அவர் தனது யூடியூப் சேனலையும் மூடி விடுவதாக கூறுகிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாமை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது. பாபர் அசாம் ஏற்கனவே 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணிக்கு டி20 கேப்டனாக இருந்திருக்கிறார். இவரது தலைமையில் 2021ஆம் ஆண்டு அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியிடம் பாகிஸ்தான் அணி தோற்றது.

அதற்குப் பிறகு 2022ஆம் ஆண்டு 2009-ல் சாம்பியன் பட்டம் பெற்ற இங்கிலாந்து அணியிடம் இறுதிப் போட்டியில் வீழ்ந்தது. எனவே அந்த குறைகளை தற்போது நிவர்த்தி செய்யும் வகையில் இவரது தலைமையிலேயே மீண்டும் பாகிஸ்தான் அணியை அறிவித்திருக்கிறது கிரிக்கெட் வாரியம். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன பாசித் அலி தற்போதைய கேப்டன் பாபர் அசாமுக்கு சவால் ஒன்றை விடுவித்து இருக்கிறார்.

- Advertisement -

பாபர் அசாம் முன்னணி அணிகளுக்கு எதிராக மூன்று சிக்சர்களை அடிக்க வேண்டும் எனவும், அப்படி அவர் அடித்து விட்டால் தனது யூ டியூப் சேனலை மூடி விடுவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அவரது சவாலை ஆசம் ஏற்றுக்கொண்டு அதை அவர் நிறைவேற்றாவிட்டால் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்க கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்த அவர் விரிவாக கூறும்பொழுது
“பாபர் அசாம் உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக மூன்று மூன்று சிக்சர்களை அடிக்க வேண்டும். அவ்வாறு அவர் அடித்தால் நான் எனது யூடியூப் சேனலை மூடி விடுவேன். சிறந்த அணிகள் என்றால் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக அல்ல. டி20 கிரிக்கெட்டில் தலை சிறந்து விளங்கும் அணிகளுக்கு எதிராக அவர் அடிக்க வேண்டும்.

இதையும் படிங்க: சுயமரியாதைக்காக விளையாடுறோம்.. ரசிகர்களை ஏமாற்ற விரும்பல.. அதுக்காக இந்த ஷாட் ஆடறேன் – விராட் கோலி பேச்சு

அவர் இந்த சவாலை ஏற்றுக் கொள்கிறார் என்றால் அதை அவர் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவரால் மூன்று சிக்சர்கள் அடிக்க முடியாவிட்டால் அவர் அதற்குப் பிறகு ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக தனது பேட்டிங்கை தொடங்கக்கூடாது. இந்த சவாலை நான் அவருக்கு விடுவிக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

Published by