8 சிக்ஸர்களை நொறுக்கிய கிளாசன்.. 5 பந்தில் 7 ரன்கள்.. ஹீரோவான கேகேஆர் ஹர்ஷித் ராணா

0
1161
IPL

17ஆவது ஐபிஎல் சீசனில் இன்று இரண்டாவது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

கொல்கத்தா அணிக்கு திரும்பவும் சுனில் நரை துவக்க ஆட்டக்காரராக வந்து 2 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்தபடியாக வெங்கடேஷ் ஐயர் 7, ஸ்ரேயாஸ் ஐயர் 0, நிதிஷ் ரானா 9 என வரிசையாக வெளியேறினார்கள். இந்த நேரத்தில் ஆச்சரியப்படுத்தும் விதமாக ராமன் தீப் சிங் அனுப்பப்பட்டார். அவர் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து துவக்க வீரராக வந்திருந்த விக்கெட் கீப்பர் பில் சால்ட் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்குப் பிறகு ரிங்கு சிங் உடன் ரசல் ஜோடி சேர ஆட்டத்தில் அனல் பறந்தது. ரசல் அதிரடியாக விளையாடிய 20 பந்தில் அரை சதம் அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிங்கு சிங் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதி வரை களத்தில் நின்ற ரசல் 25 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 64 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணியின் தரப்பில் நடராஜன் நான்கு ஓவர்களுக்கு 32 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து பெரிய இழப்பை நோக்கி விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் 32(21) மற்றும் அபிஷேக் ஷர்மா 32(19), ராகுல் திரிபாதி 20(20), அப்துல் சமாத் 15(10) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

திடீரென மாறிய போட்டி

இந்த நிலையில் ஹைதராபாத் மணி 15 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஐந்து ஓவர்களுக்கு அந்த அணியின் வெற்றிக்கு 80 ரன்கள் தேவைப்பட்டது. அங்கிருந்து ஹென்றி கிளாசன் ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக ஹைதராபாத் அணியின் பக்கம் திருப்பினார். 25 பந்துகளில் அதிரடியாக அரைசதம் அடித்து, கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் மட்டுமே தேவை என்கின்ற நிலைக்கு கொண்டு வந்தார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் இருபதாவது ஓவரை இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தையே ஹென்றி கிளாசன் அடித்தார். இதற்கு அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்து வெற்றிக்கு நான்கு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் அவருடன் இணைந்து சிறப்பாக இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தை நகர்த்தி வந்த ஷாபாஷ் அகமத் ஐந்து பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மேற்கொண்டு ஹைதராபாத் வெற்றிக்கு மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் நான்காவது பந்தை எதிர்கொண்ட யான்சன் ஒரு ரன் எடுத்தார். இரண்டு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பேட்டிங் முனைக்கு சென்ற ஹென்றி கிளாசன் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆட்டம் இழந்தார். இதனால் ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. இந்தப் பந்தை எதிர்கொண்ட பேட் கம்மின்ஸ் அடிக்காமல் தவறவிட, பரபரப்பான இந்த போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : MI vs GT.. கப்ப இப்பவே குடுத்துடுங்கப்பா.. மும்பையின் அதிரடியான உத்தேச பிளேயிங் XI

இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ஹென்றி கிளாசன் 29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட எட்டு ரன்கள் மட்டுமே தந்த ஹர்சித் ராணா நான்கு ஓவர்களில் 33 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இளம் வேகபந்துவீச்சாளராக இருந்தாலும் கிளாசன் போன்ற பேட்ஸ்மேனை கட்டுப்படுத்தி வெற்றியை பெற்று தந்தது சிறப்பான விஷயம்!