17.4 ஓவர்.. தோக்காத கேகேஆர்-க்கு சேப்பாக்கத்தில் முற்றுப்புள்ளி.. சேசிங்கில் தோனி சாதனை.. சிஎஸ்கே அபார வெற்றி

0
1107
Ruturaj

இன்று ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இந்த ஐபிஎல் தொடரில் தோல்வி அடையாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. கேகேஆர் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் முதல் பந்திலேயே வெளியேறினார். தொடர்ந்து சுனில் நரைன் மற்றும் ரகுவன்சி இருவரும் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பவர் பிளேவில் கேகேஆர் அணிக்கு 56 ரன்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கு அடுத்து மெதுவாக பந்து திரும்பிய சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் கலக்கினார்கள். கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் 27 (20), ரகுவன்சி 24 (18), ஸ்ரேயாஸ் ஐயர் 34 (32), வெங்கடேஷ் ஐயர் 3 (8), ரமன்தீப் சிங் 13 (12), ரிங்கு சிங் 9 (14), ரசல் 10 (10), மிட்சல் ஸ்டார்க் 0 (3), அனுக்குல் ராய் 3* (3), வைபவ் அரோரா 1 (1)* ரன்கள் எடுத்தார்கள்.

கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியின் தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே மூன்று விக்கெட்டுகள், முஸ்தஃபிஷர் ரஹ்மான் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். ரவீந்திர ஜடேஜாவின் இன்றைய பந்துவீச்சு சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்தரா 15 (8), டேரில் மிட்சல் 25 (19), சிவம் துபே 28 (18), தோனி 1* (3) ரன்கள் எடுத்தார்கள். இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை அடித்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 58 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 67ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 14 ஓவர் 81 ரன்.. கேகேஆர்-க்கு எதிரா எங்க பிளான் இதுதான்.. இனிமே சாதாரண கிரிக்கெட் விளையாடினாலே போதும் – ஜடேஜா பேட்டி

இறுதியில் சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். தற்போது ஆறு புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக ரன் சேஸ் செய்யும் பொழுது அதிக முறை நாட் அவுட் ஆக ஜடேஜா மற்றும் தோனி இருவரும் 27 முறை இருந்திருக்கிறார்கள். இந்த போட்டியில் தோனி 28 வது முறையாக நாட் அவுட் ஆக இருந்து புது சாதனை படைத்திருக்கிறார்.