ஐபிஎல் 2024.. யாரும் எதிர்பாராமல் அணியில் தக்க வைக்கப்பட்ட 5 வீரர்கள்

0
4784

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டிற்கான தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் பத்து அணிகளும் நேற்று வெளியிட்டன. இதில் பல முக்கிய வீரர்களும் அணிகளில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்சை அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்தது.

இந்த வருடம் அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அறிவித்ததால் அவரை நேற்று விடுவித்து இருக்கிறது. இதேபோன்று மற்ற அணிகளிலும் சரியாக விளையாடாத வீரர்கள் அணிகளால் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். எனினும் கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்படாத ஐந்து வீரர்கள் அந்த அணிகளால் தக்கவைக்கப்பட்டு இருக்கின்றனர் அவர்கள் யார் என்று பார்ப்போம்.

- Advertisement -

ப்ரீத்தி ஷா: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா கடந்த ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு போட்டியில் கூட அரை சதம் எடுக்கவில்லை. மேலும் அவரைப் பற்றி பல வதந்திகளும் சர்ச்சைகளும் எழும்பிய நிலையிலும் டெல்லி கேப்பிட்டல் அணி நிர்வாகம் அவரை தக்க வைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. ப்ரீத்வி ஷாவிற்கு மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபிக்க டெல்லி அணி வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

அர்ஜுன் டெண்டுல்கர்: சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஆடும் லெவனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இடம் பெற்றார். எனினும் ஒரு சில போட்டிகளுக்குப் பிறகு அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இறுதிக்கட்டத்தில் பந்து வீசி அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலும் மும்பை அணி அர்ஜுன் டெண்டுல்கரை தக்க வைத்திருப்பது கிரிக்கெட் விமர்சகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

ரியான் பராக்: இவர் சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார், இருந்தும் அந்த நிர்வாகம் இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து தக்க வைத்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரியான் பராக் தன்னை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

அப்துல் சமத்: ஜம்மு காஷ்மீர் வீரரான அப்துல் சமத் நீண்ட நாட்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஐபிஎல் போட்டிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் இவர் மீது நம்பிக்கை வைத்து இவரை மீண்டும் ஒருமுறை தக்க வைத்து இருக்கிறது.

தீபக் ஹூடா: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரரான தீபக் ஹூடா 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் இந்த வருட ஐபிஎல் தொடர் இவருக்கு மிகவும் மோசமானதாக அமைந்தது. அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய இவரது சராசரி 8. இந்த வருட ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக யுவர் லக்னோ அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லக்னோ நிர்வாகம் இவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.