கேப்டன் ருதுராஜுக்கு 4வது முறையாக நடந்த துரதிஷ்டம்.. சிஎஸ்கே வைத்த 3 ட்விஸ்ட்

0
343
Ruturaj

இன்று 2024 ஐபிஎல் தொடரின் 18 ஆவது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட்டு கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

தற்பொழுது போட்டி நடைபெற இருக்கும் ஆடுகளம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்த அதே சாதனை ஆடுகளம் ஆகும். எனவே இன்றைய போட்டியிலும் இரு அணிகளில் இருந்தும் பெரிய அளவில் ரன் மழை பொழிய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது நான்காவது போட்டியில் விளையாடுகிறது. தற்பொழுது இந்த அணிக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் ருதுராஜ் கேப்டனாக தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் டாசை இழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு முறை கூட அவர் டாசை வெல்லவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் பெரிய பின்னடைவாக குட்டி மலிங்கா மதிஷா பத்திர நா சிறிய காயத்தின் காரணமாக விளையாட முடியாமல் போயிருக்கிறது. அதே சமயத்தில் அவருடைய இடத்தில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி இடம் பெறுகிறார். மேலும் இரண்டு மாற்றங்களாக மதிஷா தீக்ஷனா மற்றும் மொயின் அலி இருவரும் இடம் பெறுகிறார்கள். முஸ்தஃபிசூர் ரஹ்மான் பங்களாதேஷ் திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மயங்க் அகர்வால் இடம்பெறவில்லை. அவருடைய இடத்திற்கு நிதிஷ் ரெட்டி கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் கடந்த போட்டியில் இடம் பெற்ற உம்ரான் மாலிக் இடத்தில், காயம் சரியா ஆகிய தமிழக வீரர் நடராஜன் இடம் பெறுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க அந்த விஷயத்தை மறந்துட்டோம்.. இப்ப மொத்த சிஎஸ்கே டீம் பிளான் இதுதான் – ரகானே பேட்டி

இன்றைய போட்டி குறித்து பேசி உள்ள சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறும் பொழுது “எல்லாம் நல்லபடியாக செல்கிறது. எங்களுடைய அணி எல்லாவற்றிற்கும் மிகச் சிறப்பாக தயாராகி இருக்கிறது. என் அளவில் நான் பெரிய மாற்றங்கள் எதையும் செய்து கொள்ளவில்லை. கேப்டன் என்பது எனக்கு ஒரு புதிய சவால்தான். ஆனால் இதை நான் நன்றாக உணர்கிறேன். இன்று எங்கள் அணியில் மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன” என்று கூறி இருக்கிறார்.