ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணியில் கவனிக்க வேண்டிய 5 அன்கேப்டு இந்திய இளம் வீரர்கள்

0
191
CSK

ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் வெற்றி மந்திரம் என்பது அனுபவ வீரர்கள் மேல் முதலீடு செய்வதுதான். பெரும்பாலும் இளம் வீரர்களை உருவாக்கி, அவர்களை அணியின் நிரந்தர வீரர்களாக மாற்றி வெற்றி பெறுவது சிஎஸ்கே அணியின் பாணியாக இருந்து வந்தது கிடையாது. அதே சமயத்தில் சில இளம் வீரர்களை உருவாக்கவும் செய்திருக்கிறது.

மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்து ஓய்வு பெற இருக்கின்ற நிலையில், அந்த அணியின் வெற்றி பெறுவதற்கான அணுகு முறையில் சில மாற்றங்களை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை நிறைய வாங்கியது. ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் தேவையில்லை என்கின்ற சூழல் உருவானது. தற்பொழுது பேட்டிங் யூனிட்டுக்கும் இளம் இந்திய வீரர்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் தேட ஆரம்பித்திருக்கிறது. இந்த வகையில் இந்திய அணிக்காக விளையாட சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கும் ஐந்து முக்கிய வீரர்கள் பற்றி பார்ப்போம்

- Advertisement -

சமீர் ரிஸ்வி :

20 வயதான இந்த உத்தர பிரதேச வலதுகை இளம் இந்திய பேட்ஸ்மேன் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருக்கிறது. இவரை வலதுகை சுரேஷ் ரெய்னா என்று அழைக்கிறார்கள். உத்திரபிரதேச டி20 லீக்கில் அதிரடியாக இரண்டு சதங்கள் அடித்ததின் மூலம் இவர் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றார். அம்பதி ராயுடுவின் இடத்தை இவரால் நிரப்ப முடியும் என்று, சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி நம்புகிறார். திறமை இருக்கின்ற காரணத்தினால் தான் 8.40 கோடி ரூபாய் கொடுத்து இந்த வீரரை சிஎஸ்கே வாங்கி இருக்கிறது.

துஷார் தேஷ்பாண்டே :

- Advertisement -

மும்பையைச் சேர்ந்த இவர் டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தவர். நடந்து முடிந்த ரஞ்சி டிராபி தொடரில் பந்துவீச்சில் மட்டும் இன்றி பேட்டிங்கிலும் கலக்கி இருக்கிறார். ஆண்டுகள் ஆக அனுபவம் கிடைக்கக் கிடைக்க இவர் மிகவும் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக உருவாகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு இவர் வீசிய ஒரு அற்புதமான அவுட் ஸ்விங் பந்து இவரது திறமைக்கு சாட்சி. கடந்த முறை சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பொழுது அனைத்து ஆட்டங்களிலும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

முகேஷ் சவுத்ரி :

இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆர்பி.சிங் மற்றும் ஆஸ்திரேலியா இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் இருவரது கலவையில் இடதுகையில் பந்து வீசக்கூடிய இவர் எதிர்கால இந்திய அணி வீரராகவும் பார்க்கப்படுகிறார். கடந்த ஐபிஎல் தொடரை காயத்தின் காரணமாக இழந்திருந்தார். இந்த முறை விட்டதை பிடிப்பதற்காக காத்திருக்கிறார்.

பிரசாந்த் சோலங்கி :

24 வயதான இவர் லெக் ஸ்பின்னர். இம்ரான் தாகீருக்கு முன்பும் பின்பும் சிஎஸ்கே அணியில் இவரைப் போன்ற மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய இடம் கிடையாது. ஜடேஜா அஸ்வின் போன்ற விரல் சுழற் பந்துவீச்சாளர்களுக்குதான் சிஎஸ்கேவில் அதிக இடம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் இவரது திறமை காரணமாக இவரை கடந்த முறை சிஎஸ்கே வாங்கியது. எங்காவது கிடைக்கும் வாய்ப்பில் சாதித்தால் இவர் தொடர்ச்சியாக விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதையும் படிங்க : மிட்சல் ஸ்டார்க்கை பொளந்து கட்டிய ரிங்கு சிங்.. 20வது ஓவரில் 20 ரன்.. மாஸ் பினிஷிங்

ராஜ்யவர்தன் ஹங்கர்கேகர் :

இந்த ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பைக்கு முன்பு நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அணிகளிடம் பெற்றிருந்த வலதுகை வேகப்பந்துவீச்சாளர். கடந்த ஐபிஎல் சீசனில் சில போட்டிகளில் சிஎஸ்கே அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார். பந்தை உள்நோக்கி ஸ்விங் செய்யக்கூடிய இவர், கடைசி கட்டத்தில் வந்து பெரிய சிக்ஸ்ர்களை அடிக்கக்கூடிய பவர் ஹிட்டர். எனவே இவர் மீதும் பெரிய கவனம் இருக்கிறது.