ஐபிஎல் 2024.. எதிர்பார்க்காத வகையில் கழட்டி விடப்பட்ட 5 வீரர்கள்.. காரணம் என்ன?

0
908
IPL

அடுத்த ஆண்டு 2024 ஐபிஎல் தொடருக்காக மினி ஏலம் துபாயில் டிசம்பர் 19ஆம் தேதி நடக்க இருக்கிறது. வீரர்களை டிரேடிங் செய்து கொள்ள டிசம்பர் 13ஆம் தேதி வரையில் கால அளவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் வீரர்களை தக்க வைக்கவும் வெளியேற்றவும் நேற்று முன்தினமே கடைசி நாளாக இருந்தது. இதில் சில அணிகள் எதிர்பார்க்காத வகையில் சில வீரர்களை வெளியேற்றி ஆச்சரியம் தந்திருக்கிறது. அவர்கள் யார் என்று இந்த கட்டுரைத் தொகுப்பில் பார்ப்போம்.

- Advertisement -

சேனாபதி சிஎஸ்கே:

ஒரிசா மாநில அணிக்காக விளையாடி வரும் இந்த இளைஞரை அம்பதி ராயுடு இடத்துக்காக முன்கூட்டியே ஏலத்தில் வாங்கி வைத்திருந்தது சிஎஸ்கே. ரசிகர்களும் அவரை அம்பதி ராயுடு இடத்தில் வைத்தே பார்த்தார்கள். தற்பொழுது இந்திய வீரர் ரகானே கிடைத்திருக்கின்ற காரணத்தினால், அதிரடியாக இவரை நீக்கி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஜோப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ்:

- Advertisement -

உலகின் அதிவேக ஆபத்தான பந்துவீச்சாளரான இவரை வான்கடே மைதானத்திற்காகவே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஆனால் பந்து வீசும் முழங்கையில் இவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடுவதற்கு நிச்சயமற்ற தன்மையில் இருக்கிறார். எனவே 8 கோடி ரூபாயை வேறு யார் மீதாவது முதலீடு செய்ய இவரை அதிரடியாக நீக்கி இருக்கிறார்கள்.

ஹர்சல் படேல் ஆர்சிபி :

இவருடைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அறிமுகத்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக வந்தார். மெதுவான பந்துகளை வீசுவதில் நிபுணரான இவருக்கு அதுவே பின்பு பலவீனமாக மாறியது. மேலும் சிறிய மைதானமான பேட்டிங் செய்ய சாதகமான சின்னசாமி மைதானத்தில், இவரது மெதுவான பந்துகளை பேட்ஸ்மேன்கள் எளிதாக அடித்து விடுகிறார்கள். இதன் காரணமாக 10 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கிய இவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெளியேற்றி இருக்கிறது.

ஷாருக்கான் பஞ்சாப் கிங்ஸ் :

2021 ஆம் ஆண்டு 5.25 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் இவரை வாங்கியது. அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் ஒன்பது கோடி கொடுத்து மீண்டும் இவரை வாங்கியது. மூன்று வருடங்கள் அந்த அணிக்காக இவர் விளையாடியிருக்கிறார். மேலும் எந்த அணிக்கும் இந்திய வீரர்கள் அவசியமானவர்கள். ஆனால் இவரை திடீரென தனது பட்டியலில் இருந்து வெளியேற்றி இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். இவர் பந்தை டைமிங் செய்ய தாமதமாகிறது என்பதால், அதிரடியாக ஷாட்டுக்கு செல்வது கடினமாகிறது. இதுவே இவர் வெளியேற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.

ஜோஸ் ஹேசில்வுட் ஆர்சிபி:

சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக செயல்பட்ட இவரை கடந்த மெகா ஏலத்தில் 7.75 கோடி கொடுத்து அதிரடியாக வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இவர் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் மனைவியின் பிரசவம் காரணமாக முதல் பாதிக்கு கிடைக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. எனவே எதைப் பற்றியும் யோசிக்காமல் அதிரடியாக பெங்களூரு நிர்வாகம் இவரை நீக்கிவிட்டது. மற்ற அணிகளும் இவரை வாங்க ஆர்வம் காட்டுவார்களா என்று தெரியவில்லை!