முதலிடத்தில் இருந்தும் பயன் இல்லை.. பிளே ஆப் சுற்றிலிருந்து குஜராத்தும் வெளியேறும்..! அபாயத்தில் ஹர்திக் அணி

0
12696

ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய அனைத்து அணிகளும் 12 போட்டிகளில் விளையாடிவிட்டன தற்போது குஜராத் அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகள் உடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் அப்படி இருந்தும் குஜராத் அணியால் இன்னும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முடியவில்லை.

அப்படி என்றால் இந்த சீசன் எந்த அளவுக்கு கடும் நெருக்கடியை அணைத்து அணிகளுக்கும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம். மும்பைக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணி தோல்வியை தழுவியது. இதனால் அவர்கள் 16 புள்ளிகள் உடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

முதல் இடத்தில் இருந்தும் ஒரு தவறை செய்தால் அவர்கள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அது எப்படி என்று தற்போது பார்க்கலாம். குஜராத் அணி இன்னும் இரண்டு ஆட்டங்களில் விளையாட உள்ளது.

முதல் போட்டி ஹைதராபாத்துடன் வரும் 15ஆம் தேதியும், இரண்டாவது ஆட்டம் பெங்களூருடன் 21ஆம் தேதி விளையாடுகிறது. இந்த இரண்டு ஆட்டத்திலும் குஜராத் அணி ஒருவேளை தோல்வியை தழுவினால் அவர்கள் 16 புள்ளிகளிலே தங்கி விடுவார்கள். மேலும் சென்னை, மும்பை, ராஜஸ்தான், லக்னோ, பெங்களூர், பஞ்சாப் ,ஹைதராபாத் ஆகிய அணிகள் அனைத்தும் 16 புள்ளிகளை பெற முடியும்.

இதனால் பிளே ஆப் சுற்றில் எந்த அணி நுழையப் போகிறது என்பதை ரன் ரேட் தான் முடிவு செய்யும். அப்படி இருக்கும் பட்சத்தில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணி அதிகபட்சமாக 19 மற்றும் 17 புள்ளிகளை முறையே பெறும். மும்பை இந்தியன்ஸ் அணியும் 18 புள்ளிகளை அதிக பட்சமாக பெற முடியும்.

- Advertisement -

ஒருவேளை மும்பையும் லக்னோவும் மோதும் ஆட்டத்தில் மும்பை வென்றால் லக்னோவால் 17 புள்ளிகளை பெற முடியாது. அதே சமயம் மும்பை தோற்றால் அவர்களும் 16 புள்ளிகளில் தங்கி விடுவார்கள். இதனால் முதல் இரண்டு இடத்தை குஜராத் அணியால் பெற முடியாது. இதேபோன்று ராஜஸ்தான் பெங்களூரும் வரும் 14ஆம் தேதி மோதுகின்றன. இதனால் இரு அணிகளில் ஒருவரால் மட்டுமே 16 புள்ளிகளை பெற முடியும்.

இதேபோன்று ராஜஸ்தானும், பஞ்சாப்பும் 19ஆம் தேதி மோதுகின்றனர். இதனால் இவ்விரு அணிகளிலும் ஏதேனும் ஒரு அணி மட்டும்தான் 16 புள்ளிகளை பெற முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சிஎஸ்கே அணி எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றிலும், லக்னோ எஞ்சிய மூன்று ஆட்டங்களில் அனைத்திலும் வெல்ல வேண்டும்.

மும்பை லக்னோவிடம் தோற்றும் ஹைதராபாத்தை வென்றும், ராஜஸ்தான் எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் குஜராத் அணி தொடரை விட்டு வெளியேறிவிடும் .இதனால் குஜராத் அணி என்று இரண்டு ஆட்டங்களும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.