ஐபிஎல்.. காயத்தால் 2023ல் ஆடாத 6 வீரர்கள்.. 2024ல் ரிடர்ன்.. இந்த வாட்டி மிஸ் ஆகாது

0
2899

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கும் நிலையில் அது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் தொடரான ஐபிஎல் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளது.

கடந்த சீசனில் விளையாடாத ஆறு இந்திய வீரர்கள் தற்போது மீண்டும் களம் இறங்க உள்ளனர். அது கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறது. அந்த ஆறு வீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

- Advertisement -

1.ரிஷப் பந்த்

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரிஷப் பந்த் கடந்த ஆண்டு மிகப் பெரிய கார் விபத்தில் சிக்கினார். இதனால் கடந்த சீசனில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் காரணமாக இந்த ஆண்டு மீண்டும் டில்லி அணியில் இணைகிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட அவர் மீண்டும் கேப்டனாகவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இவரது அதிரடி ஆட்டத்தை வரும் சீசனில் காணலாம்.

2.ஸ்ரேயாஸ் அய்யர்

- Advertisement -

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் விளையாட முடியாமல் இருந்தார். ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் மீண்டும் அணிக்கு திரும்பி தனது பழைய பார்மை மீட்டெடுத்தார். இவரின் காயம் காரணமாக கடந்த சீசனில் கொல்கத்தா அணி நித்திஷ் ராணாவை கேப்டனாக அறிவித்தது. எனவே இந்த ஆண்டு இவர் மீண்டும் கேப்டன் ஆகும் நிலையில் கொல்கத்தா அணியை சிறப்பாக வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.ஜஸ்பிரித் பும்ரா

பும்ரா தொடர்ச்சியான முதுகு வலியின் காரணமாக டி20 உலக கோப்பைத் தொடர் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரையும் தவறவிட்டார். இவர் இல்லாத மும்பை அணியின் பந்துவீச்சை அணி நிர்வாகம் உணர்ந்திருக்கிறது. எனவே இவர் மீண்டும் அணிக்கு திரும்பும் நிலையில் பந்து வீச்சு குறித்த கவலையை நிவர்த்தி செய்வார்.

4.வாஷிங்டன் சுந்தர்

ஹைதராபாத் அணியின் முதன்மையான சுழற்பந்துவீச்சாளர் மற்றும் ஓரளவு பேட்டிங் செய்யக்கூடிய திறனும் கொண்டவர். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போன சீசனைத் தவறவிட்டார். இந்நிலையில் காயம் முழுமையாக குணமாகி அணிக்கு திரும்பும் நிலையில் ஹைதராபாத் அணிக்கு குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.

5.ரஜத் பட்டிதார்

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிய ராஜத் பட்டிதார் போன சீசனில் காயம் காரணமாக முழு தொடரிலும் விளையாடவில்லை. இவரது திறமையைக் கண்ட பெங்களூரு அணி நிர்வாகம் 20 லட்சத்துக்கு இவரை அணியில் தக்க வைத்துக் கொண்டது. இவர் மீண்டும் அணிக்குத் திரும்பும் நிலையில் பெங்களூர் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை மீண்டும் வலுப்பெறும்.

6.பிரசித் கிருஷ்ணா

திறமையான வேகபந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவை 10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல் அணி நிர்வாகம் மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. முதுகில் ஏற்பட்ட அழுத்த முறிவுக்கு கடந்த ஆண்டு பிரசித் கிருஷ்ணா அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளார். தற்போது காயம் முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.