தல தோனி சின்ன தல ரெய்னா.. சிஎஸ்கே ஃபேன்ஸ் உங்களுக்கு என்ன தந்தாங்க? – ஜடேஜா நச் பதில்

0
1169
Jadeja

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான முறையில் விளையாட விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றிக்கு பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மிக முக்கியமான காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருந்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று சிஎஸ்கே அணி முதலில் பந்து வீச, கொல்கத்தா அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. இந்த நிலையில் ஏழாவது ஓவருக்கு வந்த ரவீந்திர ஜடேஜா முதல் பந்திலேயே இளம் வீரர் ரகுவன்சி விக்கெட்டை கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கடுத்து ரவீந்திர ஜடேஜா என்னடா ஐபிஎல் தொடரில் ஆக்ரோஷமாக விளையாடும் சுனில் நரைன் விக்கெட்டையும், வெங்கடேஷ் ஐயர் விக்கெட்டையும் அடுத்தடுத்து வீழ்த்தி அந்த அணியின் ரன் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். மேலும் இன்று நான்கு ஓவர்கள் பந்துவீசி அவர் 18 ரன்கள் மட்டுமே விட்டு தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணி வெகு எளிதாக 17.4 ஓவர்களில் இலக்கை ஏற்றி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ருதுராஜ் ஆட்டம் இழக்காமல் 67 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகனுக்கான விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு கொடுக்கப்பட்டது.

மேலும் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்ட பொழுது நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜடேஜாவிடம் ” சிஎஸ்கே ரசிகர்கள் தோனியை தல என்றும் ரெய்னாவை சின்ன தல என்றும் அழைக்கிறார்கள். அப்போது நீங்கள் தளபதியா? உங்களுக்கு அவர்கள் என்ன பெயர் வைத்திருக்கிறார்கள்? ” என்ற சுவாரசியமான கேள்வியை கேட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க: இது அவங்க இடம்.. செய்ய வேண்டியத செஞ்சிட்டாங்க.. இந்த தப்பால தோத்தோம் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

இதற்கு பதில் அளித்து பேசிய ரவீந்திர ஜடேஜா “தோனி மற்றும் ரெய்னாவுக்கு அவர்கள் பெயர்கள் கொடுத்து விட்டார்கள். எனக்கு இன்னும் அப்படி எதுவும் தரவில்லை. ஏதாவது ஒன்று தருவார்கள் என்று நினைக்கிறேன். மேலும் இந்த விக்கெட்டில் எனது பந்துவீச்சை நான் ரசிக்கிறேன். சரியான பகுதிகளில் பந்து வீசினால் விக்கெட் கிடைக்கும் என்று நம்பினேன். இங்கு வரும் அணிகளுக்கு நிலைமைகளைக் கணிக்க இரண்டு மூன்று நாட்கள் போதாது. அவர்கள் வந்த உடனே இங்கு உள்ள ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொள்வது கடினம். இங்குள்ள நிலைமைகள் எங்களுக்குத்தான் நன்றாக தெரியும்” எனக் கூறியிருக்கிறார்.