ஒரிஜினல் பாஸ்பால் இதான்யா.. “முதல் போட்டியில் இருந்து என் திட்டமே இதுதான்” – தொடர் நாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி

0
534
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, இந்த டெஸ்ட் தொடர் நடைபெற்ற முடியும் பொழுது ஜெய்ஸ்வால் வேறு ஒரு உயரத்தில் இருப்பார் என கவாஸ்கர் கூறியிருந்தார்.

அவர் கூறியிருந்தது போலவே இந்த டெஸ்ட் தொடர் முடியும்பொழுது இந்திய கிரிக்கெட்டின் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இளம் இடதுகை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மாறி இருக்கிறார். மேலும் இந்திய அணிக்காக இவர் மூன்று வடிவத்திலும் நீண்ட வருடங்கள் விளையாடக்கூடிய வீரர் என்பது உறுதியாக இருக்கிறது.

- Advertisement -

நடைபெற்று முடிந்திருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில் ஜெயசுவால் ஒட்டுமொத்தமாக இரண்டு இரட்டை சதங்கள் மூன்று அரை சதங்கள் உடன் 89 ரன் ஆவரேஜில் 712 ரன்கள் குவித்திருக்கிறார்.

சுனில் கவாஸ்கருக்கு பிறகு ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்கள் கடந்த இரண்டாவது இந்தியர், டான் பிராட் மேனுக்கு அடுத்து குறைந்த டெஸ்ட் போட்டியில் முதல் ஆயிரம் ரன்களை அடித்த வீரர், ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

துவக்க வீரராக வந்து அச்சமற்ற முறையில் விளையாடி இவர் இந்திய அணிக்கு கொடுத்த துவக்கம், நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இல்லாத போதும் கூட, இந்திய அணி இந்தத் தொடரை வெல்வதற்கும், கேப்டன் ரோஹித் சர்மா அணியை எளிதாக வழி நடத்தவும் பெரிய உதவி செய்திருக்கிறது.

- Advertisement -

எனவே இவருக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது. விருது பெற்ற ஜெய்ஸ்வால் பேசும் பொழுது ” இந்தத் தொடர் முழுவதையும் நான் ரசித்து விளையாடினேன். மேலும் இந்த தொடரில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். நான் விளையாடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு குறிப்பிட்ட பந்தில் என்னுடைய ஷாட்டை விளையாடி, அதில் ரன் எடுக்க முடியும் என்றால், நான் நிச்சயம் சிக்ஸர் அடிப்பேன். நான் ஒரு நேரத்தில் அந்தப் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடி, அணியின் வெற்றிக்கு பங்களிக்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க : “அவன பிரஷர்ல வைக்க முடியல.. அவன்தான் பவுலர்களை பிரஷர்ல வச்சான்.. வெற்றிக்கு காரணம் இதான்” – ரோகித் சர்மா பேச்சு

என்னுடைய திட்டம் என்னவென்றால், ஒரு பந்துவீச்சாளரை மனரீதியாக கீழே இறக்குவதுதான். நான் அந்தப் பந்துவீச்சாளரை வீழ்த்த வேண்டும். இதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. இதிலிருந்து நான் பின்வாங்க கிடையாது. போட்டியை எடுத்துக் கொள்வதின் மூலம், அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும். மேலும் என்னுடைய ஆட்டத்தின் மூலமாக அணியை எப்பொழுதும் வின்னிங் பொசிஷனில் வைத்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.