லாங்கர் இந்திய பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்தாரா? – அவரே வெளியிட்ட சுவாரசிய தகவல்

0
39
Langer

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக தற்பொழுது விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பொறுப்புக்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் விண்ணப்பித்திருக்கிறாரா என்பது குறித்து அவரே பேசியிருக்கிறார்.

தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு கொண்டு வருகின்றன. மேலும் ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டு விடும். அதுவரையில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

- Advertisement -

மேலும் விண்ணப்பிப்பதற்கு முக்கியமான ஐந்து தகுதிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கிறது. அந்த ஐந்து தகுதிகளின் அடிப்படையில், அனுபவம் இல்லாத மற்றும் அசோசியேட் கிரிக்கெட் நாட்டைச் சேர்ந்த யாரும் பயிற்சியாளராக வர முடியாத அளவுக்கு விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு தந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா அணியை, அதன் மரியாதையை மீட்டெடுத்த பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் இருக்கிறார். ஆனால் மரபார்ந்த கிரிக்கெட் பயிற்சி முறைகளில் வீரர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார் என்று, வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்ட காரணத்தினால், அவரே பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

தற்போது அவர் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். மேலும் அந்த அணி ப்ளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பில் இன்னும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வர அவர் விரும்புகிறாரா? என்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்.. 5 முக்கிய விதிகள்.. இவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நிச்சயமாக நான் அதற்கு ஆர்வமாக இருக்கின்றேன். ஆனால் அதைப் பற்றி நான் தற்பொழுது நினைக்கவில்லை. எந்த ஒரு சர்வதேச அணியின் பயிற்சியாளர்கள் மீதும் எனக்கு நிறைய மரியாதை உண்டு. அந்த பொறுப்புக்கு இருக்கும் அழுத்தத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பது மிகவும் அசாதாரணமான விஷயமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். விண்ணப்பித்தவர்கள் யார் என்பது தொடர்பான விவரங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படாமல் காக்கப்பட்டு வருகிறது என்று தெரிகிறது!