சிஎஸ்கே அணியில்.. நானும் ஜடேஜாவும் விரக்தி அடைந்தோம்.. உண்மையை உடைத்த அம்பதி ராயுடு

0
1132
Jadeja

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அத்துடன் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கே அணியின் அம்பதி ராயுடு முடித்துக் கொண்டார். தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து அம்பதி ராயுடு முக்கியமான பரபரப்பான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா ஆறு முறை கோப்பையை வென்ற அணிகளில் இடம் பிடித்திருக்கிறார். அவரைப் போலவே அம்பதி ராயுடும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு அணிகளிலும் சேர்த்து ஆறு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற பொழுது அணியில் இருந்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதற்காக, சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் சொந்த அணியின் வீரரை அவுட் ஆகும்படி கோஷம் எழுப்பினார்கள். இது அப்பொழுதே சமூக வலைதளத்தில் மற்றவர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஒரு முறை நேரடியாகவே சமூக வலைதளத்தில் ஜடேஜா தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணி சாம்பியன் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இது சிஎஸ்கே அணிகின்ற ரசிகர்களுக்கு அவர் தந்த பதிலடி போல அமைந்தது.

இந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் ஒருதலை பட்சமாக தோனிக்கு மட்டும் பெரிய அளவில் ஆதரவு அளித்து செயல்பட்டு வருவது, அணியில் ஜடேஜாவுக்கு விரக்தி அளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது என்கின்ற உண்மையை தற்போது அம்பதி ராயுடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சுப்மன் கில்லை நம்ப வேண்டும்.. ஸ்டீவ் வாக் எங்களுக்கு இதை சொல்லி இருக்காரு – மேத்யூ ஹைடன் பேட்டி

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நீங்கள் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் கூட்டம் அமைதியாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் பொழுது ஜடேஜாவும் நானும் இதைத்தான் உணர்ந்தோம். நான் உண்மையில் சொல்கிறேன், சிஎஸ்கே ரசிகர்கள் முதலில் தோனியின் ரசிகர்கள், அடுத்துதான் அவர்கள் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள். இதனால் ஜடேஜா விரக்தி அடைந்தார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறி இருக்கிறார்.