“அவன பிரஷர்ல வைக்க முடியல.. அவன்தான் பவுலர்களை பிரஷர்ல வச்சான்.. வெற்றிக்கு காரணம் இதான்” – ரோகித் சர்மா பேச்சு

0
743
Rohit

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இளம் வீரர்கள் கொண்ட அணியை வழிநடத்தி இந்திய கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக வென்று இருக்கிறார்.

இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை நான்குக்கு ஒன்று என கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் முதல் போட்டியில் தோற்று, முக்கியமான வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை மேற்கொண்டு வழிநடத்தி, கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதோடு, பேட்ஸ்மேனாகவும் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டு 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து, இந்திய அணியின் இந்த வெற்றியில் தன்னுடைய பங்கை அளித்திருக்கிறார்.

இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு பேசி உள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா “இப்படி ஒரு வெற்றி வருகின்ற பொழுது அங்கு எல்லா விஷயங்களும் மிகச் சரியாக நடைபெற்ற இருக்க வேண்டும். இது அனுபவம் குறைந்த அணியாக இருக்கலாம். ஆனால் இவர்கள் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள்.

மேலும் எங்கள் அணியில் இருந்த இளம் வீரர்கள் எல்லோருமே அழுத்தத்தின் கீழ் சிறப்பாக விளையாடினார்கள். மேலும் அணியின் வெற்றிக்கான பெருமை முழு அணிக்குமே சேரும். இதைப்பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு தொடரில் வெற்றி பெறும் பொழுது பேட்ஸ்மேன்கள் அடித்த ரன்களும், சதங்களும் பேசப்படும். ஆனால் நீங்கள் 20 விக்கெட்டுகள் கைப்பற்றாமல் டெஸ்ட் போட்டியை வெல்ல முடியாது. எங்கள் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

குல்தீப் காயத்திற்கு பிறகு திரும்பி வந்து மிகவும் சிறப்பாக இருக்கிறார். அவருக்கு நிறைய திறன்கள் கிடைத்து இருக்கின்றன. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசினார். மேலும் அவர் நிறைய முயற்சி செய்யக் கூடியவராக இருக்கிறார். அவருடைய பேட்டிங்கிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிங்க : “எங்க தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்.. நாங்க அத மட்டும் செஞ்சிருந்தா கதையே வேற” – ஸ்டோக்ஸ் பேச்சு

ஜெய்ஸ்வால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். அவரைப் பார்ப்பதற்கு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பந்துவீச்சாளர்களை பிரஷரில் வைத்திருக்கக் கூடிய அளவுக்கு திறமையாக இருக்கும் பொழுது, இவருக்கு எதிர்காலத்தில் சவால்கள் நிறைய வரும். ஆனால் இந்த கடினமான பையன் சவால்களை நேசிக்கிறார். அவர் பெரிய ஸ்கோர் செய்ய விரும்பக் கூடியவர். அவருக்கு தெளிவாக இது சிறந்த தொடர்” என்று கூறி இருக்கிறார்