18.2 ஓவர்.. மூன்றாம் கட்ட நியூசி அணியிடம் சொந்த நாட்டில் தோற்ற பாகிஸ்தான்.. சாப்மேன் காட்டடி பேட்டிங்

0
21
Chapman

முன்னணி வீரர்கள் இடம்பெறாத நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி மழையால் இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்டு கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்தின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சையும் அயுப் 22 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டனாக மீண்டும் வந்துள்ள பாபர் அசாம் தொடக்க வீரராக வந்து 29 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மூன்றாவது இடத்திற்கு அனுப்பப்பட்ட முகமது ரிஸ்வான் மிகவும் மந்தமான முறையில் 21 பந்தில் 22 ரன், இர்பான் கான் 20 பந்தில் 30 ரன் என எடுத்தார்கள். கடைசிக் கட்டத்தில் சதாப் கான் 20 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 41 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் ராபின்சன் 19 பந்தில் 28 ரன், டிம் செய்பர்ட் 16 பந்தில் 21, பாக்ஸ்கிராப்ட் 29 பந்தில் 31 ரன்கள் என சுமாரான பங்களிப்பையே செய்தார்கள். நியூசிலாந்து அணிக்கு அதிரடியான ரன் பங்களிப்பு தேவைப்பட்டது.

இந்த நேரத்தில் அதிரடியாக விளையாடிய மார்க் சாப்மேன் ஆட்டம் இழக்காமல் 42 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 87 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.2 ஓவரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தற்பொழுது தொடரை தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 14 ஓவர்கள் வெறும் 84 ரன்.. 9 விக்கெட்.. குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் சரண் அடைந்த பஞ்சாப் கிங்ஸ்

நியூசிலாந்து அணியில் இந்த பாகிஸ்தான் தொடருக்கு, அந்த அணியில் இருந்த நட்சத்திர வீரர்கள் யாருமே இடம் பெறவில்லை. எல்லோரும் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருந்த பொழுதும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வைத்து நியூசிலாந்தின் மூன்றாம் தரமான அணி வீழ்த்தி இருக்கிறது.