நான் பேட்டிங் பண்ணப்பவே பவுலிங் பிளான் பண்ணிட்டேன்.. டிகேவை இப்படித்தான் வெளியே அனுப்பினேன் – ரசல் பேட்டி

0
206
DK

இன்று ஐபிஎல் தொடரில் நடைபெறும் இரண்டு போட்டிகளில் முதலில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில், கொல்கத்தா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆண்ட்ரே ரசல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் 14 பந்தில் 48 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்தில் 50 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் 222 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது. ஆர்சிபி தரப்பில் கேமரூன் கிரியின் மற்றும் யாஷ் தயால் 2 விக்கெட்டை எடுத்தார்கள்.

- Advertisement -

அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு வில் ஜேக்ஸ் மற்றும் ரஜத் பட்டிதார் இருவரும் 48 பந்தில் 102 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து அந்த அணிக்கு கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, கரண் சர்மா மூன்று சிக்ஸர்கள் அடித்தார். ஆனாலும் ஆர்சிபி அணி ஒரு பந்துக்கு மூன்று ரன் எடுக்க முடியாமல், ஒரு ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

மேலும் இந்தப் போட்டியில் பேட்டிங்கில் ரசல் 20 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். மேலும் சிறப்பாக விளையாடிய வில் ஜேக்ஸ் மற்றும் ரஜத் பட்டிதார் இருவரையும் ஒரே ஓவரில் வெளியே அனுப்பினார். மேலும் 19 ஆவது ஓவருக்கு வந்து ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை கைப்பற்றினார். கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கு இவரது பங்களிப்பு மிக முக்கிய காரணமாக இருந்தது.

ஆட்டநாயகன் விருது பெற்ற ரசல் பேசும் பொழுது “எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. நான் முன்பே சொன்னது போல என்னுடைய பந்துவீச்சை நான் எப்பொழுதும் நம்புகிறேன். முக்கியமான நேரத்தில் பந்தை கையில் எடுத்த காரணத்தினால் நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்பினேன். அதிர்ஷ்டவசமாக அது இன்று நடந்தது. நான் பேட்டிங் செய்யும்பொழுது வேகம் மாறி வரும் பந்துகளை விளையாடுவது கடினமாக இருந்தது. நான் இதையே பந்து வீசும் பொழுது அவர்களுக்கு எதிராக பயன்படுத்தினேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இது பைத்தியக்காரத்தனமானது.. நானும் கோலியும் அது அவுட்டுனு ஏத்துக்கல – பாப் டு பிளேசிஸ் பேட்டி

நான் இரண்டு செட் பேட்டர்களை வீழ்த்தியது ஆட்டத்தை மாற்றியது. மேலும் நரைன் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகளும் முக்கியமானது. மேலும் என்னிடம் இரண்டு ஓவர்கள் இருந்தது. நான் 19வது ஓவரை வீசி, முடிந்த அளவு ஸ்டார்க் பந்து வீசுவதற்கு ரன்கள் கொடுக்க விரும்பினேன். மேலும் டிகே ஆட்டம் இழக்காமல் இருந்ததால், அவருக்கு என்னுடைய 6 பந்தையும் வேகத்தை மாற்றி கலந்து வீச முடிவு செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.