சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்றாக அறிமுகமான 6 கிரிக்கெட் ஜோடிகள்

0
4718
Rahul Dravid & Ganguly and Ab de Villiers & Dale Steyn

தற்போது உள்ள நவீன உலகில், கிரிக்கெட் மிகவும் பிரபலமான ஓர் விளையாட்டாக கருதப்படுகிறது. அப்பேற்பட்ட விளையாட்டில், உலகம் பேசும் வீரராக உயர்வது சற்று கடினமே. பல உள்ளூர் போட்டிகளில் சாதித்தப் பிறகே தேசிய அணிக்குள் நுழைய முடியும். ஒரு சில வீரர்கள் மாநில அளவு வரை சாதித்த பிறகு, மேலும் உயர முடியாமல் நம்பிக்கையை இழந்து வேறு உத்தியோகத்திற்கு சென்று விடுவர்.

ஒரு துறையில் சாதிக்க வேண்டுமெனில், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் அவசியம். பல வீரர்கள் இதைக் கடைபிடித்து, தேசிய அணிக்கு தேர்வாகியுள்ளனர். இந்தக் கட்டுரையில், ஒன்றாக அறிமுகப் போட்டியில் ஆடிய பிரபல கிரிக்கெட்டர் வீரர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

1. ஸ்டீவ் ஸ்மித் – டிம் பெயின்

ஸ்மித் & பெயின், இருவரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஒன்றாக விளையாடி வருகின்றனர். டிம் பெயின், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். அவருக்கு முன் ஸ்டீவ் ஸ்மித், கேப்டனாக இருந்தார். சான்ட்பேப்பர் வழக்கில் ஸ்மித் ஈடுபட்டதால், அவரின் கேப்டன்சி பறிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் 2010ல் பாகிஸ்தான் எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினர். ஸ்டீவ் ஸ்மித், லெக் ஸ்பின்னராகவும் டிம் பெயின், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் களமிறங்கினர். காலப் போக்கில் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக முன்னேறினார்.

2. எம்.எஸ்.தோனி – ஜோகிந்தர் ஷர்மா

28 வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 கோப்பை ஆகிய மூன்றையும் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். தோனி & ஜோகிந்தர் ஷர்மா என்றால் நம் நினைவுக்கு வருவது 2007 டி20 உலகக் கோப்பை தான்.

- Advertisement -

விறுவிறுப்பான கடைசி ஓவரில் மிஸ்பா உல் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியை வெற்ற பெற செய்தார். இவர்கள் இருவரும் 2004ல் பங்களாதேஷ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினர். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஒன்றாக ஆடி உள்ளனர்.

3. கே.எல்.ராகுல் – கருன் நாயர்

KL rahul and Karun Nair

லோகேஷ் ராகுல், தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியிலேயே சதம் விளாசிய சாதனை படைத்தார். அப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். அதே போட்டியில் கருன் நாயரும் அறிமுகமானார். ராகுல் சிறப்பாக ஆடினார் ஆனால் கருன் நாயர் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த இரு வீரர்களும் கர்நாடக அணிக்ககவும் ஒன்றாக விளையாடி உள்ளனர். இன்று கே.எல்.ராகுல், இந்திய அணியின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறார். ஆனால் கருன் நாயருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பில் முச்ச்தம் விளாசி அமர்களப்படுத்தினார். அதன் பின்னர், அவர் எந்தப் போட்டியிலும் களமிறங்கவில்லை.

4. ராகுல் டிராவிட் – சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி நிச்சயம் இருப்பர். இருவரும் 1996ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கினர். கங்குலி, அறிமுகப் போட்டியில் அதுவும் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் அன்று ஈர்த்தார்.

நாளைடைவில் டிராவிட் & கங்குலி, இருவரும் இந்திய டெஸ்ட் அணியின் சிகரங்களாக உயர்ந்தனர். ‘ டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவர் ‘ என்று டிராவிட்டையும் ‘ ஆஃப் சைடின் கடவுள் ‘ என்று கங்குலியையும் அழைப்பர்.

5. ஏபி டிவில்லியர்ஸ் – டேல் ஸ்டெயின்

டிசம்பர் 2004ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டிவில்லியர்ஸ் & ஸ்டெயின் அறிமுகமாகினர். 2007 முதல் 2014 வரை நடந்த வெளிநாட்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் கூட தென்னாபிரிக்கா தோற்க்கவில்லை. பேட்டிங்கில் டிவில்லியர்ஸ் சிறப்பிக்க பவுலிங்கில் ஸ்டெயின் அதிரடி காட்ட, தென்னாபிரிக்கா அணி டெஸ்ட் கிரிக்கெட்டை ஆண்டு வந்தது.

இவர்கள் இருவரும் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்தனர். சர்வதேச அளவில் இவர்கள் இருவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன், டிவில்லியர்ஸ் மற்றும் ஸ்டெயின், பெங்களூர் அணியில் ஒன்றாக ஆடினார். அதற்குப் பின் ஸ்டெயின், தனிப்பட்ட காரணத்தால் விலகிக் கொண்டார்.

6. யுவராஜ் சிங் – ஜாகீர் கான்

2011 ஐசிசி உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற மிக முக்கியமாக இருந்த வீரர்கள் இவர்களே. அத்தொடரின் சிறந்த ஆல்ரவுண்டராக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டு தொடர் நாயகன் விருதும் பெற்றார். ஜாகீர் கான், தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக செயல்பட்டார்.

இந்த இரண்டு ஜாம்பவான் வீரர்களும், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்கள் இருவரும் முதன் முதலில் 2000ம் ஆண்டு ஐசிசி நாக் அவுட் டிராபியில் கென்யா அணிக்கு எதிராக களமிறங்கினர்.