கிரிக்கெட் விளையாட்டு நாளுக்கு நாள் உலக அளவில் பரந்து விரிந்து செல்லும் அதே வேளையில் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட்டையும் நாளுக்கு நாள் மேம்படுத்திக் கொண்டு போகிறார்கள். தங்களுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ளும் அதே சமயத்தில் தங்களுடைய அழகு சம்பந்தமான விஷயத்திலும் அவர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்ள தவறியதில்லை.
ஒரு சில சமயங்களில் கிரிக்கெட் வீரர்கள் வழக்கத்திற்கு மாறான புதிய ஹேர்ஸ்டைலை அறிமுகப்படுத்துவார்கள். அந்த ஹேர் ஸ்டைல் அதன் பின்னர் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு ஒரு சில சமயங்களில் அது அனைவர் மத்தியிலும் பிரபலமாகியுள்ளது. அப்படி வித்தியாசமான ஹேர் ஸ்டைலை கொண்டு கிரிக்கெட் விளையாடிய சில கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்
1. கர்ட்லி ஆம்புரோஸ்

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த இவர் வேகப்பந்து வீச்சில் ஒரு முன்னோடி என்று சொல்லும் அதே வேளையில், வித்தியாசமான ஹேர் ஸ்டைலை அனைவருக்கும் அறிமுகப் படுத்துவதிலும் ஒரு முன்னோடி என்று தான் சொல்ல வேண்டும்.
தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் இவர் அடிக்கடி தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டே வருவார். நடுப்பகுதியில் மட்டும் நீண்ட முடியை வளர்த்து, அதில் பாசிமணிகள் கோர்த்து பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இவரது ஹேர்ஸ்டைல் இருக்கும் இருக்கும். இந்த ஸ்டைல் வைப்பதற்கு முன்பாக இதேபோல நடுப்பகுதியில் சற்று குறைவான முடியை வைத்து இருப்பார். அந்த ஸ்டைல் பார்ப்பதற்கு ஒரு எட்டுக்கால் பூச்சி இவரது தலையில் உட்கார்ந்திருப்பது போல் இருக்கும்.
2. காலின் மில்லர்
Colin Miller hair varieties. @tensporttv @bowlologist @MarkHoward03 pic.twitter.com/4XvmKTtm41
— Rob J Williams (@ourswich) January 20, 2018
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் தன்னுடைய 34 வது வயதில்தான் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தொடங்கினார். 2001-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இவர் தனது தலைமுடியை நீல கலரில் கலரிங் செய்து விளையாடினார்.
அந்தத் தொடரில் வித்யாசமான கலரில் தலைமுடியை கொண்டு விளையாடிய இவரை அனைவரும் மிக வித்தியாசமாக பார்த்தார்கள். குறிப்பாக எதிர் அணி கேப்டன் கோர்ட்னி வால்ஷ் இவரைப் பார்த்து சிரிப்பை அடக்கமுடியாமல் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டே இருந்தார். இது சம்பந்தமாக அவரும் அனைவரும் என்னை வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்றும் இது எதிர்பார்த்த வரவேற்பு தான் என்றும் கூறினார்.
3. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

ஆன்ட்ரூ சைமன்ஸ் எப்பொழுதும் தனது முடியை வளர்த்து கொண்டே வருவார். அவர் நீண்ட முடிகளை சிறிது சிறிதாக ஜடை போல பின்னிய வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவார்.
ஆனால் 2009ஆம் ஆண்டு அவர் தனது முழு முடியையும் சவரம் செய்து கொண்டார். அவர் அப்படி செய்தது ஒரு மிகப்பெரிய நல்ல நல்ல காரியத்திற்காக என்று பின்னால் தெரிய வந்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லுகேமியா அறக்கட்டளைக்காக அவர் பத்தாயிரம் டாலர் பணம் இட் அவே இவ்வாறு தனது முழு தலையையும் அவர் சவரம் செய்து கொண்டார்.
இது சம்பந்தமாக பேசி அவரது ஏஜென்ட் மேட் ஃபெரான், ஒரு நல்ல விஷயத்திற்காக இவர் அவ்வாறு செய்வது வரவேற்புக்குரியது. மேலும் இப்பொழுது அவர் பார்ப்பதற்கு பிரஷ் ஆக இருக்கிறார் என்று கூறினார். மேலும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒரு நல்ல காரியத்திற்காக இவ்வாறு செய்தது அனைத்து ஆஸ்திரேலிய ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
4. மகேந்திர சிங் தோனி

நம் இந்திய வீரர்களை பொறுத்தவரையில் அடிக்கடி வித்தியாசமான மற்றும் கூலான ஹேர் ஸ்டைல் வைப்பதில் மகேந்திர சிங் தோனி வல்லவர். 2013ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் மோகாக் என்கிற வித்தியாசமான ஹேர் ஸ்டைலை வைத்துக்கொண்டு விளையாடினார்.
அந்த ஸ்டைலில் இடது மற்றும் வலது பக்கத்தில் சுத்தமாக முடி இருக்காது. ஆனால் நடுப்பகுதியில் நெற்றி முதல் கழுத்து வரை நீண்ட ஸ்பைக் போன்ற ஸ்டைலில் முடி வெட்டப் பட்டிருக்கும்.
இந்த ஹேர் ஸ்டைலில் அவர் விளையாடியதும், பிரபல குத்துச்சண்டை வீரர் சிவா தப்பா தோனி தன்னுடைய ஹேர் ஸ்டைலை காப்பி அடித்து உள்ளார் என்று கூறினார். தான் இந்த ஹேர் ஸ்டைலை நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே வைத்து விட்டதாகவும், அதன் பின்னரே தோனி வைத்துள்ளார்.
எனவே அதனடிப்படையில் மகேந்திர சிங் தோனி தன்னுடைய ஹேர் ஸ்டைலை காப்பியடித்து உள்ளார் என்றும் சிவா தப்பா விளக்கமளித்தார்.
5. லசித் மலிங்கா

இவரது பெயரைக் கேட்டதும் இவருடைய அழகான சுருள் முடி தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். சுருட்டை முடியை கொண்ட லிங்கா தனது முடியை நீளமாக வளர்த்து அதை மேலும் நன்றாக சுருட்டி விட்டு ஒவ்வொரு முடியிலும் கலரிங் செய்து பார்ப்பதற்கு மிக வித்தியாசமாக இருப்பார். இந்த ஹேர் ஸ்டைல் உலக அளவில் அனைவராலும் ஈர்க்கப்பட்டு, பின்னர் பிரபலமான ஹேர் ஸ்டைல் ஆக மாறியது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக பேசிய அவர் நான் என் தலைமுடிக்கு கலரிங் மட்டுமே செய்து உள்ளேன். ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று நினைத்து நான் இவ்வாறு கலரிங் செய்து உள்ளேன் என்றும், இதில் கிண்டலடிப்பது இருக்கு ஒரு விஷயமும் இல்லை என்று கூறினார்.
2007ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில், லசித் மலிங்காவுக்கு இந்த ஹேர்ஸ்டைலை இவருடைய ஹேர் ஸ்டைலிஸ்ட் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக வைத்தார் என்பது பின்னாளில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
6. ஹென்றி ஓலங்கா
Happy birthday Henry Olonga!
— ICC (@ICC) July 3, 2019
He took 126 international wickets in a career that spanned eight years. pic.twitter.com/wgcGiOCKSX
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரரான இவர் தன்னுடைய ஸ்டைலுக்கு பெயர் போனவர். நீண்ட முடிகளை வைத்து அதை சிறிது சிறிதாக ஜடை பின்னி வித்தியாசமான ஸ்டைலை இவர் வைத்திருப்பார். ஆன்ட்ரூ சைமன்ஸ் ஹேர் ஸ்டைல் போலவே இவரது ஹேர் ஸ்டைல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய ஹேர் ஸ்டைல் குறித்து பேசிய இவர், தனித்துவமாக இருக்க நான் விரும்பினேன். அதற்காக இந்த ஹேர் ஸ்டைலை நான் தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார். இதில் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஒரு விஷயம் கிடையாது, இது ஒரு சாதாரண ஹேர் ஸ்டைல் என்றும், இது எனக்கு பிடித்திருக்கிறது அதனால் இதை வைத்திருக்கிறேன் என்று கூறினார். மேலும் இந்த ஹேர்ஸ்டைலுக்கு மத ரீதியான எந்த தொடர்பும் கிடையாது என்றும் விளக்கம் அளித்தார்.
7. ஆண்ட்ரூ ரசல்

மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் வீரரான இவர் சமீப காலங்களாக வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதற்கு முன்பாக இவர் ஒரு வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் களமிறங்கினார். இவர் கடந்த இரண்டு பக்கத்திலும் சுத்தமாக முடி எதுவும் இல்லாமல் நடுப்பகுதியில் மட்டும் நிறைய முடி வைத்து களமிறங்கினார்.
இவருடைய ஸ்டைல் பார்ப்பதற்கு அப்படியே டபிள்யூ டபிள்யூ இ (WWE) வீரர் டுரியாட் ஹேர் ஸ்டைல் போலவே இருக்கும்.டுரியாட் ராக்கி உட்பட சில ஹாலிவுட் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஸ்டைலில் இவர் 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கினார்.
அப்பொழுது போட்டியில் இந்த வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் மேலும் வித்தியாசமாக தனது கூலிங் கிளாசை பின்பக்கமாக மாட்டி அந்த போட்டியில் விளையாடினார். இவரது ஹேர் ஸ்டைல் அனைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.