சர்வதேச இந்திய அளவில் மோசமான சாதனை படைத்த அர்ஸ்தீப் சிங் – வீடியோ இணைப்பு!

0
356
Arsdeep

இந்தியா வந்துள்ள இலங்கை அணி தற்பொழுது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது!

இந்த தொடரில் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக அமைந்த அந்தப் போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று புனே மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

இதில் இரண்டாவது ஓவரை முதல் போட்டியை காய்ச்சலால் தவறவிட்ட இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்திப் சிங் வீசினார். இந்த ஓவரில் தான் அவர் அவரே விரும்பத்தகாத ஒரு சாதனையை மோசமாக படைத்துக்கொண்டார்!

இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை நோ பாலாக வீசிய அதற்கு அடுத்து தொடர்ந்து இரண்டு நோ பால்கள் வீசி, ஹாட்ரிக் நோபால் வீசிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து டி20 போட்டிகளில் அதிக நோபால் வீசிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சர்வதேச சாதனையையும் படைத்தார். இந்தப் போட்டியில் ஒரே ஒரு பந்தை வீச போய் தற்பொழுது இரண்டு மோசமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் அர்ஸ்தீப் சிங். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!