கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் செய்தவருக்கு பதிலடி கொடுத்த 5 வீரர்கள்

0
1745
Sledging in Cricket

ஸ்லெட்ஜிங் என்பது தற்போதைய கிரிக்கெட் சாதரமான ஒன்றாக மாறிவிட்டது. விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் தங்களது எதிரணி வீரர்களை வாய்வார்தைகள் மூலம் தூண்டச்செய்வது ஸ்லெட்ஜிங் எனப்படும். ஒரு சில முறை, ஸ்லெட்ஜிங் செய்யும் அணிக்கு பின்னடைவும் ஏற்ப்பட்டு உள்ளது. விராட் கோஹ்லி, கிளென் மேக்ஸ்வெல் போன்ற பேட்ஸ்மேன்கள் எதிரணி பந்துவீச்சாளர்களால் ஸ்லெட்ஜிங் செய்யப்பட்டு, மிகவும் கோவம் அடைந்து தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

இது போல் பல முறை கிரிக்கெட்டில் நடந்துள்ளது. ரசிகர்களும் இது போன்ற ஸ்லெட்ஜிங்கை விரும்புகின்றனர். ஏனென்றால், அப்போது தான் ஆட்டத்தில் அனல் பறக்கும். ஸ்லெட்ஜிங் செய்த. வீரருக்கு பதிலடி கொடுத்த கிரிக்கெட்டர்களைப் பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

5. ஶ்ரீசாந்த் v ஆண்ட்ரே நெல்

களத்தில் அதிக கோபம் அடையும் வீரர், ஶ்ரீசாந்த். ஆண்ட்ரே நெல் எனும் வேகப்பந்து வீச்சாளரும் ஶ்ரீசாந்த்தும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது ஆட்டத்தில் அனல் பறந்தது. ஶ்ரீசாந்த், பேட் செய்ய வரும் போது நெல் அவரை நோக்கி, “ எனக்கு இரத்த வாசம் அடிக்கிறது. என்னுடைய பந்தை சந்திக்க உனக்கு தைரியம் இல்லை ” என்றார்.

உடனே ஶ்ரீசாந்த், தன் சட்டையில் இருந்த இந்திய நாட்டு கொடியை காட்டி, “ நான் இதற்காகத் தான் விளையாடுகிறேன். உன்னை நான் அடுத்த பந்தில் பார்த்துக்கொள்கிறேன் ” என்று கூறினார். நெல் வீசிய அடுத்தப் பந்தில் இமாலய சிக்ஸர் அடித்து பதிலடி கொடுத்தார். அப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

4. யுவராஜ் சிங் v ஆண்ட்ரூ பிளின்டாப்

Andrew Flintoff-and Yuvraj Singh Worldcup

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மறக்க முடியாத ஓர் சிறப்பான தருணம் இது. 2007 டி20 உலகக் கோப்பையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய போது, யுவராஜ் சிங்க்கும் ஆண்ட்ரூ பிளின்டாப்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது யுவராஜ் சிங்கை மிகவும் கோவத்தில் ஆழ்தியது.

- Advertisement -

இளம் வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய அடுத்த ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு மொத்த உலகத்தையும் மிரள வைத்தார். 12 பந்துகளில் அரை சதம் அடித்தார். டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர் நம் யுவராஜ் சிங் தான்.

3. சச்சின் டெண்டுல்கர் v அப்துல் காதிர்

1989ல் இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 158 ரன்களை சேஸ் செய்யும் போது, சச்சின் டெண்டுல்கர் இளம் பந்துவீச்சாளரான முஷ்தக் அஹ்மத்தை இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அடுத்த ஓவரில், உலகின் தலைசிறந்த ஸ்பின்னரான அப்துல் காதிர், சச்சினிடம் சென்று “ ஏன் சிறுவர்களை அடிக்கிறாய், முடிந்தால் என்னுடைய ஓவரில் அடி ” என்றார்.

அப்துல் காதிர் கேட்டதை சச்சின் டெண்டுல்கர் அடுத்த ஓவரிலயே தந்தார். அந்த ஓவரில், சச்சின் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். உலகமே அன்று, சச்சின் டெண்டுல்கரின் மறுமுகத்தைப் பார்த்தது.

2. பிரைன் லாரா v டேனிஷ் கனேரியா

பிரைன் லாரா, தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். லாராவுடம் வாக்குவாதம் வைத்துக்கொண்டால், நிச்சயம் பதிலடி கிடைக்கும் என்பதை டேனிஷ் கனேரியா அன்று உணர்ந்தார். டேனிஷ் கனேரியா வீசிய முதல் பந்தில், லாரா பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் டாட் செய்தார்.

கனேரியா, நக்கலாக சிரித்துக்கொண்டே “ சிறப்பாக விளையாடினாய் ” கூறிக்கொண்டே கைத் தட்டினார். அதற்கு அடுத்த மூன்று பந்தில் 6,6,6,4 என அந்த ஓவரில் மொத்தம் 26 ரன்கள் விளாசினார் லாரா. கனேரியாவிடம், வார்த்தைகளால் அல்லாமல் தன்னுடைய பேட்டை வைத்து பேசினார்.

1. வெங்கடேஷ் பிரசாத் v ஆமீர் சோகைல்

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதினால் அப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும், உலகக் கோப்பையின் காலிறுதி போட்டி என்றால் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். முதலில் ஆடிய இந்திய அணி பாகிஸ்தானுக்கு 288 ரன்கள் இலக்காக அமைத்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடி முதல் 10 ஓவரில் 84 ரன்கள் குவித்தனர்.

ரன்களை கட்டுப்படுத்த, வெங்கடேஷ் பிரசாத்தை பந்துவீச அழைத்தார் இந்திய கேப்டன் அசாருதீன். பிரசாத் வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடித்தப் பிறகு சோகைல், பிரசாத்தை நோக்கி திமிராக பார்த்தார். அதிக நம்பிக்கை கொண்ட சோகைல், அடுத்தப் பந்தில் ஸ்டம்புகள் சிதற கிளீன் பவுல்ட் ஆனார். இறுதியில் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.