இந்திய கிரிக்கெட்டின் தடுப்பு சுவர் ராகுல் டிராவிட் பற்றி அவ்வளவாக ரசிகர்களுக்கு தெரிந்திராத 6 விஷயங்கள்

0
3133
Rahul Dravid Facts

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக என்ன செய்திருக்கிறார் என்று இந்த ஒரு கட்டுரையில் கூறிவிட முடியாது. இந்திய அணி தோற்று விடும் என்று நினைக்கும் நேரத்தில் நீண்ட நேரம் தன்னுடைய தடுப்பாட்டத்தை போட்டு இந்திய அணியை காப்பாற்ற இருக்கிறார். அதன் காரணமாகவே டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை மேற்கொண்ட ஒரே பேட்ஸ்மேன் இவர் மட்டுமே.

மேலும் சச்சின் டெண்டுல்கருக்கு இருக்கையில் அவருக்கு இணையாக விளையாடிய ஒரே வீரர் இவர் மட்டுமே. தற்பொழுது நேஷனல் கிரிகெட் அகடமிக்கு தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறார். அதேபோல அண்டர் 19 மற்றும் இந்திய ஏ அணி வீரர்களை ஏற்படுத்திவரும் சிறந்த பயிற்சியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ராகுல் டிராவிட் பற்றி நிறைய விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும் அவரை பற்றி அவ்வளவாக வெளியே தெரியாத ஒரு சில விஷயங்களை தற்போது இந்த கட்டுரையில் பார்ப்போம்.

1. டி20 போட்டியில் அவர் அறிவித்த ஓய்வு அறிவிப்பு

Rahul Dravid T20I

எந்த ஒரு வீரரும் ஒரு கிரிக்கெட் பார்மட்டில் விளையாடு வதற்கு முன்பாகவே தன்னுடைய ஓய்வு பற்றி அறிவிக்க மாட்டார்கள். ஆனால் ராகுல் டிராவிட் தன்னுடைய சர்வதேச டி20 போட்டி பயணத்தை தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிட்டார்.

இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டி 20 போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே இதுதான் தன்னுடைய கடைசி போட்டி என்றும் இதன் பின்னர் இந்த டி20 தொடர் போட்டிகளில் அவர் விளையாட போவதில்லை என்றும் கூறி தான் விளையாட தொடங்கினார்.

- Advertisement -

அவர் கூறியதைப் போலவே அந்த ஒரு போட்டிக்கு பிறகு எந்தவித டி 20 போட்டிகளிலும் அவர் பங்கெடுத்து விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதற்கு பிறகு சில ஆண்டுகள் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. டெஸ்ட் விளையாடும் நாடுகளில் குறைந்த பட்சம் ஒரு சதம்

ராகுல் டிராவிட் டெஸ்ட் விளையாடும் அணிகளின் மைதானங்களில் குறைந்தபட்சம் ஒரு சதம் ஆவது அடித்திருப்பார். இந்த சாதனையை அவர் 2004 ஆம் ஆண்டு முதல் முறையாக பதிவு செய்தார். அவர் ஓய்வு பெறும் வரை எந்த எந்த நாடுகள் டெஸ்ட் போட்டி விளையாடியதோ அந்த நாடுகள் அனைத்திற்கும் சென்று சிறப்பாக விளையாடி ஒரு சதம் அடித்திருக்கிறார்.

அதன்படி இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் என அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் இவர் ஒரு சதமடித்து அந்த சாதனையை தனது பெயருக்கு பின்னால் வைத்திருக்கிறார்.

3. கர்நாடக அணிக்காக ஹாக்கியில் விளையாடியது

Rahul Dravid Hockey

ராகுல் டிராவிட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் தான் சிறப்பாக விளையாடுவார் என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால் அவர் கர்நாடக அணிக்காக ஜூனியர் அளவிலான மாநில லெவலில் நடைபெறும் ஹாக்கி போட்டியிலும் விளையாடி இருக்கிறார்.

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு சமயத்தில் இதை அவர் பகிர்ந்து கொண்டார். அதன் பின்னர் ஒருசில காரணங்களால் ஹாக்கி விளையாட்டை கைவிட்டு, கிரிக்கெட் விளையாடத் தொடங்கி, அவர் கிரிக்கெட் வீரரான கதையையும் ராகுல் டிராவிட் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. 1999 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர்

ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் பெயர் போனவர் என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால் அவர் ஒருநாள் போட்டியிலும் மிக சிறப்பாக விளையாடியவர்.

குறிப்பாக 1999 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் அதிக ரன்களை குவித்தார். இந்திய அந்த தொடரில் வெற்றி பெறவில்லை என்றாலும், அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்தார். மேலும் அந்த ஆண்டு ஐசிசி அந்த வருடத்திற்கான சிறந்த ஒரு நாள் போட்டிக்கான வீரராக ராகுல் டிராவிட் பெயரை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

5. இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருநாள் போட்டிகளில் அதிவேக 50 ரன்கள்

மகேந்திர சிங் தோனி விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணியில் ஒரு சில ஆண்டுகள் ராகுல் டிராவிட் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வந்தார். 2003 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இவர் 22 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் அடித்தார்.

அதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வரிசையில் அதிவேக அரை சதத்தை குவித்த சாதனையையும் இப்பொழுதும் இவர், தனது பெயருக்குப் பின்னால் ராகுல் டிராவிட் வைத்திருக்கிறார்.

6. ஸ்காட்லாந்து அணிக்கு விளையாடியது

இந்திய வீரர்கள் மத்தியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மந்தீப் சிங் ஆகிய வீரர்கள் எதிரணிக்கு ஒரு சில சமயங்களில் ஃபீல்டர்களாக விளையாடி இருக்கிறார்கள். ஆனால் ராகுல் டிராவிட் ஒரு படி மேலே சென்று ஸ்காட்லாந்து அணிக்காக பதினொரு போட்டிகள் விளையாடி இருக்கிறார்.

2003ம் ஆண்டு ஸ்காட்லாந்து அணி வெளிநாட்டு வீரர் ஒருவரை தனது அணியில் விளையாட ஆசை பட்டது. அதன்படி அவர்கள் சச்சின் டெண்டுல்கரை கேட்டபோது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ராகுல் டிராவிட் விளையாட அனுமதித்தது.

2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நடந்து முடிந்தவுடன் அனைத்து வீரர்களும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த வேளையில் ராகுல் டிராவிட் சர்வதேச அளவில் ஸ்காட்லாந்து அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 600 ரன்கள் குவித்தார். ஸ்காட்லாந்து அணிக்காக விளையாடிய இவருடைய பேட்டிங் அவரேஜ் 66.66 ஆகும்.