நாளை இலங்கைக்கு எதிராக உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. ஸ்ரேயாஸ் இடத்தில் இஷான்?.. அஸ்வினுக்கு 2வது வாய்ப்பு?.. முழு அலசல்!

0
2348
ICT

நாளை இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது ஏழாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது.

தற்பொழுது ஆறு போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தாலும் கூட, இந்திய அணி அதிகாரப்பூர்வமாக இன்னும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய போட்டியில் வெல்வதின் மூலம் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா இலங்கைக்கு எதிரான போட்டியில் இடம்பெற மாட்டார் என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. அவர் லீக் சுற்றின் கடைசி போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக களம் இறங்க வாய்ப்புகள் அதிகம்.

ஸ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பந்துகளை மிக மோசமாக விளையாடி தன்னுடைய விக்கெட்டை கொடுத்து வருகிறார். இருந்தாலும் இந்திய அணி அடுத்த போட்டியில் அவரை மாற்றாது என்றே தெரிகிறது. காரணம் மத்திம ஓவர்களில் சுழற் பந்துவீச்சை விளையாடி ரன்கள் கொண்டு வருவதில் அவர் திறமையானவர். எனவே நாளை அவருக்கு ஒரு கூடுதல் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

இஷான் கிஷான் ஆசிய கோப்பையில் நல்ல விதத்தில் விளையாடி இருந்தாலும் கூட, அவர் மத்திம ஓவர்களில் சுழற் பந்துவீச்சில் ஸ்ட்ரைக்கை சுழற்றி ஒன்று இரண்டு ரன்கள் எடுப்பதில் தடுமாற்றம் கொண்டிருந்தார். எனவே அவரை நான்காம் இடத்தில் கொண்டு வருவதற்கு இந்திய அணி நிர்வாகம் தயங்கும்.

- Advertisement -

மேலும் மும்பை வான்கடே மைதானம் சிவப்பு மண் ஆடுகளம் என்கின்ற காரணத்தினால் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். எனவே ரவிச்சந்திரன் அஸ்வினை களம் இறக்குவதும் கடினமானதே. முகமது சிராஜிக்கு ஓய்வு தரப்படாமல் விளையாடுவார் என்று தெரிகிறது. எனவே கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே அணி விளையாடுவதற்கு இந்திய தரப்பில் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இலங்கைக்கு எதிரான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்!

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.