INDvsSA.. பலஆண்டு பிரச்சனைக்கு தீர்வு.. ரோகித் டிராவிட் வச்ச ட்விஸ்ட்.. எதிர்பார்க்கவே இல்ல!

0
239
Dravid

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் பாக்ஸிங் டே டெஸ்டில், இன்று மழை ஈரத்தின் காரணமாக போட்டிக்கு முக்கால் மணி நேரம் தாமதமாக டாஸ் போடப்பட்டது.

பொதுவாக இந்தக் குறிப்பிட்ட செஞ்சுரியன் மைதானத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுக்கும் அணிகளே வெற்றி பெற்று வந்தன.

- Advertisement -

ஆனால் தற்பொழுது மழை இரண்டு நாட்களுக்கு இருக்கின்ற காரணத்தினால், வேகப்பந்து வீச்சுக்கு அதிகமான சாதகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அதற்கேற்றது போல் இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா, தங்கள் அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார்.

இந்திய அணியின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டாஸ் வெல்ல முடியாத ஒரு விஷயமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் டாஸ் தாண்டி இந்திய அணி வெற்றி பெறுகிறது.

- Advertisement -

இப்படியான சூழலில் இந்திய அணி இந்த போட்டிக்கு அதிரடியான ஒரு மாற்றத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடினால், ஒரு சுழற் கொண்டு வீச்சாளருக்கு இடம் என்கின்ற நிலை இருந்து வந்தது.

தற்பொழுது இந்த ஒரு சுழற் பந்துவீச்சாளருக்கான இடத்தை ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதிரடியாக ரவீந்திர ஜடேஜா பெஞ்சில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார்.

பொதுவாக ஆசியா தாண்டி வெளிநாட்டு டெஸ்ட்களில் தொடர்ச்சியாக ஒரு சுழல் பந்துவீச்சாளருக்கான இடத்தை ரவீந்திர ஜடேஜாவுக்கு தந்து, ரவிச்சந்திரன் அஸ்வினை வெளியில் வைப்பதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வாடிக்கையாக செய்து வந்தது. தற்பொழுது ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், சர்துல் தாக்கூர், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.