INDvsSA டி20.. நாளை வலிமையான இந்திய பிளேயிங் லெவன்.. 4 அதிரடியான மாற்றங்கள்!

0
9827
ICT

சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி நாளை தென் ஆப்பிரிக்காவில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது.

இந்தப் போட்டி டர்பன் கிங்ஸ் மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்க அணித் தரப்பில் கேப்டன் பவுமா நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சிவம் துபே, பிரசித் கிருஷ்ணா மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அக்சர் படேல் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து கழட்டி விடப்பட்டு இருக்கிறார்கள்.

அதேசமயத்தில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். எனவே நாளை ஆட்டத்தில் இவர்கள் எல்லோரும் இடம் பெறுவார்களா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

தற்போது கில் உள்ளே வந்திருப்பதால் ருத்ராஜ் இடத்தில் அவர் ஆடுவாரா என்பது சுவாரசியமான கேள்வி. அதே சமயத்தில் கில் மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்றால் ஸ்ரேயாசுக்கு அணியில் இடம் இருக்காது. ருத்ராஜ், கில், ஸ்ரேயாஸ் மூவரும் ஒரே அணியில் இடம் பெறுவார்கள் என்றால், அது டி20 பேட்டிங் வரிசை போல இருக்காது.

- Advertisement -

மேலும் பந்துவீச்சை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி இந்த முறை சுழற் பந்துவீச்சுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. மேலும் முகேஷ் குமார், அர்ஸ்தீப் உடன் சேர்ந்து முகமது சிராஜ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், ருத்ராஜ், கில், சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஸ்தீப், சிராஜ் மற்றும் முகேஷ் குமார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி :

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கே), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (து.கே), ஜிதேஷ் சர்மா (வி.கீ), ரவீந்திர ஜடேஜா (வி.கீ), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமத் சிராஜ், முகேஷ் குமார் மற்றும் தீபக் சாஹர்.