INDvsSA டி20 தொடர்.. தென் ஆப்பிரிக்கா நட்சத்திர வீரர் ரூல்ட் அவுட்.. புது வரலாறு படைக்க இந்திய அணிக்கு வாய்ப்பு!

0
600
SA

இந்தியா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களையும் இதுவரையில் கைப்பற்றி இருக்கிறது. கடைசி இரண்டு முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி ஆஸ்திரேலியாலில் கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

ஆனால் இந்திய அணிக்கு நிறைவேறாத ஒரு கனவாக இன்று வரையில் தொடர்ந்து வரக்கூடிய ஒன்று, தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இதுவரை கைப்பற்றியது கிடையாது. எனவே எப்படியாவது டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆக வேண்டும் என்பது கனவாகவே இருக்கிறது.

- Advertisement -

இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்று எப்பொழுதும் சொல்வார்கள். அதுபோல தென் ஆப்பிரிக்காவை அவர்களது மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் சிரமமான ஒரு காரியமாக இந்திய அணிக்கு இருந்து வருகிறது.

கடந்த முறை விராட் கோலி தலைமையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத காரணத்தினால் கைநழுவி போனது. முதல் டெஸ்ட் வென்று கடைசி இரண்டு டெஸ்டையும் தோற்று இந்திய அணி தொடரை இழந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணம் வெற்றியடையும் வகையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு உருவாகி இருக்கிறது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை விட்டு காயத்தின் காரணமாக வெளியேறியிருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணியின் வலதுகை வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு படையில் முக்கியமான ஒரு வீரர். அன்றிச் நோர்க்கியா இல்லாத நிலையில் இவரது பங்களிப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. மேலும் இவர் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட கூடியவர்.

தற்பொழுது இவர் காயத்தின் காரணமாக நாளை தொடங்க உள்ள டி20 தொடரில் இருந்து வெளியேறி இருப்பது, இந்திய அணிக்கு ஒரு சாதகமான விஷயமாக இருக்கிறது. மேலும் இவர் தொடர்ச்சியாக அடுத்து வரும் இரண்டு தொடர்களிலும் பங்கு பெறுவாரா? என்பதும் தற்பொழுது சந்தேகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.