INDvsENG.. முதல் 2டெஸ்ட் போட்டியை தவறவிடும் இந்திய நட்சத்திர வீரர்.. மேலுமொரு வீரருக்கு அறுவை சிகிச்சை!

0
139
ICT

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் உலக கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகப்பெரிய தொடராக பார்க்கப்படுகிறது.

இந்திய அணி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மூன்றாவது முறையாக தகுதி பெறுகின்ற ஒரே அணியாக மாறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கி இருக்கும் இங்கிலாந்து இந்த தொடரை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால் கடினம் ஆகலாம்.

மேலும் இங்கிலாந்து சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போல மிகவும் அதிரடியாக அணுகி வருகிறது. இவர்களின் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறைக்கு என்று தனியாக ரசிகர் கூட்டமும் உருவாகி இருக்கிறது. சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் இவர்களது அதிரடி அணுகுமுறை சரிவருமா? என்கின்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இப்படியான காரணங்களால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் மோதிக்கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடமும் ஒரு முக்கியத்துவமும் எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கணுக்கால் காயம் இன்னும் சரி வராமல் இருக்கிறார். மேலும் அவர் இன்னும் பயிற்சியை துவங்கவில்லை. இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை தவறவிடலாம் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் சூரியகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் காலில் காயம் அடைந்தது மட்டும் இல்லாமல், அவர் ஹெர்னியா பிரச்சனையில் இருக்கிறார். எனவே அவருக்கு இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இதிலிருந்து

மீண்டு வர 8 முதல் 9 மாதங்கள் ஆகலாம். ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இவர் முழு உடல் தகுதியுடன் இருப்பார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டாலும் கூட, ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சில ஆட்டங்களில் இவர் கிடைக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.