INDvsAUS.. இந்தியா பிளேயிங் லெவன்.. சுந்தருக்கு வாய்ப்பு?.. இசான் வெளியே?.. மாற்றங்கள் இருக்குமா?

0
3753
ICT

தற்போது இந்தியாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

நாளை தொடரின் மூன்றாவது போட்டி அசாம் கவுகாத்தி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.

அதே சமயத்தில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோற்றால் தொடரை அந்த இடத்திலேயே இழப்பதோடு, அவர்களின் பரிசோதனை முயற்சிகளுக்கு பெரிய பின்னடைவை உருவாக்கும்.

எனவே அவர்கள் தொடரில் நீடிக்க நாளை கடுமையாக போராடுவார்கள். அந்த அணியில் துவக்க வீரராக ஹெட் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டி நடக்கும் மைதானத்திலும் பனிப்பொழிவு இரண்டாவது பகுதியில் அதிகமாகவே இருக்கும். எனவே டாஸ் வென்றால் முதலில் பந்துவீச்சை இரண்டு அணிகளுமே தேர்வு செய்ய விரும்பும்.

இதன் காரணமாக மூன்றாவது ஸ்பின்னர் என்கின்ற இடத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அக்சர் படேல் விளையாட முடியாமல் போனால் மட்டுமே வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவார்.

அதேபோல் வேகுபந்துவீச்சாளர் ஆவேஷ் கான் மற்றும் சிவம் துபே, விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கான வாய்ப்பு அடுத்த போட்டியில் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

ஏனென்றால் நாளை தொடரை வென்று, அடுத்த இரண்டு போட்டியில் எல்லோருக்கும் வாய்ப்பு தர இந்திய அணி நிர்வாகம் முயற்சி செய்யும். இந்த வகையில் இதுவரை விளையாடிய அணியே விளையாட வாய்ப்புகள் அதிகம்.

நாளை மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வலிமையான உத்தேச பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா.